ஜாக்டோ ஜியோ-வின் சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுக்கோட்டை, பிப். 6–- புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு – பொதுக்குழு கூட்டம் அரசு அலுவலர் கட்டடத்தில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்டத் தலைவர் ராஜாங்கம் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில சட்ட ஆலோசகர் ராஜா, மாநில செய்தி தொடர்பாளர் ரகமதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இச்செயற்குழு – பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் பெருமக்களால்  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

பிப்ரவரி 8இல் ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் முதலமைச்சருக்கு நன்றி அறிவிப்பு மாநாட்டில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் அனைத்து மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் குடும்பத்தோடு கலந்து கொள்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2004 முதல் 2006 – தொகுப்பூதிய காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உயர்கல்விக்கு ஊக்க ஊதியத்தை பழைய முறைப்படி வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பழனிச்சாமி, ரவீந்திரன், வீரமணி, முருகராஜ், வெள்ளைச்சாமி, உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக கல்வி மாவட்ட செயலாளர் முனைவர் ஆ. கலையரசன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *