புதுடில்லி, பிப்.5– தலைநகர் டில்லியில் 2026ஆம் ஆண்டின் முதல் 15 நாள்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டில்லி காவல்துறை தரவுகளின்படி, 509 பெண்கள் உள்பட மொத்தம் 807 பேர் காணாமல் போன தாக புகார்கள் பெறப் பட்டுள்ளன.
அவர்களில் இதுவரை 235 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக தெரியவந் துள்ளது. இதன்மூலம் அங்கு சராசரியாக நாளொன் றுக்கு 54 பேர் காணாமல் போயுள்ளனர்.
