சென்னை, நவ.6 – தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக் கான பணிவரன்முறை செய்தல், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குதல் போன்ற நிர்வாகப் பணிகள் மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்களால் மேற் கொள்ளப்படுகிறது.
ஆனால், சில மாவட்டங்களில் இந்தப் பணிகளில் காலதாமதம் ஏற்படுவதாகவும், குறிப்பிட்ட காலத்தில் உரிய ஆணைகள் வழங் கப்படவில்லை எனவும் பல்வேறு புகார்கள் வந்துள்ளன.
எனவே, ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை செய்தல் போன்ற பணிகளில் அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்தி அதற்கான ஆணை களை எவ்வித புகார்களுக்கும் இட மளிக்காதவாறு விரைவாக வழங்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் ஆணை வழங்காமல் இருப்பின் அதன் கார ணங்களை தெரிவித்து முழுமையான தொகுப்பறிக்கையை மாவட்ட அளவில் நவம்பர் 24ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.