‘வாஸ்கோடகாமா 11 மாதங்களில் இந்தியா வந்தார்; ஆனால் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல 2 ஆண்டுகள்’ மல்லிகார்ஜுனே கார்கே

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இம்பால், பிப் 5 மணிப்பூர் பற்றி எரியும்போது ஒன்றிய அரசு அமைதி காத்ததாகவும், அம்மாநிலத்தை ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றியதாகவும் மல்லிகார்ஜுனே கார்கே குற்றம் சாட்டியுள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின்மீது பதிலளித்து பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே,

“வாஸ்கோடகாமா போர்ச்சுகலி லிருந்து ஆப்பிரிக்கா வழியாக இந்தியாவை அடைய சுமார் 11 மாதங்கள் எடுத்துக் கொண்டார், அப்போது அவருக்கு கடல் வழி கூட தெரியாது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஸ்பெயினிலிருந்து வட அமெரிக்காவை அடைய இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டார். ஆனால் இவ்வளவு பெரிய மனிதாபிமான நெருக்கடியின் போது, எதிர்க்கட்சிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பிரதமர் மோடி டில்லியிலிருந்து மணிப்பூரை அடைய இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்.

இரண்டு சமூகங்களுக்கு இடை யிலான இன வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 70,000க்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர். நீங்கள் மணிப்பூரை இராணுவ மயமாக்கப்பட்ட மண்டலமாக மாற்றியுள்ளீர்கள். வட கிழக்கு மற்றும் இந்தியா மீதான உங்கள் அக்கறையை இப்படித்தான் வெளிப்படுத்துவீர்களா? என கார்கே கேள்வி எழுப்பினார். கார்கேவின் இந்த உரைக்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை திரும்பப் பெறுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டநிலையில் கார்கே இந்த உரையை நிகழ்த்தினார். மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஒய்.கேம்சந்த் சிங் பதவியேற்பு விழாவிற்கு சற்று முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மெய்தி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே பல மாதங்களாக நடந்த இன வன்முறையைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி பிரேன் சிங் பதவி விலகியதை அடுத்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *