உச்சநீதிமன்றத்தில் மம்தா நேரில் தோன்றி வாதம்! எஸ்.அய்.ஆர்.மீது நேரடி குற்றச்சாட்டு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப். 5 வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் எஸ்அய்ஆர் பணி நடைபெற்று வருவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

உண்மையான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. முரண்பாடு இருப்பதாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, நீண்ட வரிசையில் மக்களை காக்க வைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், எஸ்.அய்.ஆர். பணியால் பலர் உயிரிழந்துள்ளனர் எனக் குற்றம் சாட்டியுனார்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பில் பிரதிநிதிகள் ஆகியோருடன் மம்தா நேற்றுமுன்தினம் (3.2.202) டில்லி சென்று தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாரை சந்தித்தார். அப்போது, பேசிக்கொண்டிருந்தபோது, பாதிலேயே மம்தா வெளியேறினார்.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று (4.2.2026) நடைபெறும் எஸ்அய்ஆர் வழக்கில் மம்தா வழக்குரைஞராக ஆஜராவார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் எஸ்அய்ஆர் வழக்கில் ஆஜரான மம்தா  தனது வாதங்களை தொடங்கி யுள்ளார்.

அப்போது எஸ்அய்ஆர் விவகாரத்தில் பல வழக்குரைஞர்கள் நீதி மன்றத்தில் வாதிட்டா லும் எங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையத்திற்கு 6 முறை கடிதம் அனுப்பினோம், எந்த பதிலும் இல்லை என மேற்குவங்கம் தரப்பு வாதத்தை மம்தா எடுத்துவைத்தார்.

பெயர்களை நீக்கியதற்கு எதிரான மாநில அரசின் ஆதாரங்களை தேர்தல் ஆணையம் நிராகரிப்பதாக கூறிய மம்தா  பெயர்களை நீக்கும் நடவடிக்கையில் மட்டுமே தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

அய்.அய்.ஆர். விவகாரத்தில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது, எந்த வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மம்தா மனு மீது 2 நாட்களில் பதிலளிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. .

இதனையடுத்து தன்னை வாதிட அனுமதித்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்த மம்தா மக்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டுகோள் விடுத்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *