இடைக்கால ஆணையை ரத்து செய்து மீண்டும் விசாரணை நடத்திட உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை
அவசர அவசரமாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலான
சென்னை உயர்நீதிமன்ற அமர்வு விசாரித்து இடைக்காலத் தடை விதித்தது ஏன்?

புதுடில்லி, ஜன.5 துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இந்தத் தடையை உச்சநீதிமன்றம் நேற்று (4.2.2026) நீக்கியிருக்கிறது. இது தொடர்பான வழக்கில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் அடங்கிய அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதற்கான சட்ட முன்வடிவு நிறை வேற்றப்பட்டது. அதாவது ஆளு நருக்குப் பதிலாக மாநில அரசே நேரடியாக துணை வேந்தர்களை நியமிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், ஆளுநர் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழ்நாடு அரசு. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தனக்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு  ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இந்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு, அரசிதழில் வெளியிட்டது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இதை எதிர்த்து, திருநெல்வேலி யில் பா.ஜ.க.வைச் சேர்ந்த வெங்கடா ஜலபதி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பல்கலைக்கழகங்களில் வேந்தராக தமிழ்நாடு முதலமைச்சரை நியமிக்கும் வகையில், கடந்த 1994 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு நிலு வையில் உள்ள சட்ட திருத்தத்தைத் திரும்பப் பெறாமல், தமிழ்நாடு அரசு புதியதாக சட்டத்திட்டம் கொண்டு வந்து நிறை வேற்றி இருக்கிறது. இது பேரவையின் விதிகளுக்கு எதிரானது என அந்த வழக்கில் மனுதாரர் குறிப்பிட்டு இருந்தார்.

அதேபோல தமிழ்நாடு அரசின் இந்த மசோதாக்கள், பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளுக்கு எதிராக இருக்கிறது என்றும், துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான அதிகாரத்தைத் தமிழ்நாடு அரசுக்கு வழங்கும் இந்த சட்டங்கள், சட்ட விரோதமானவை என்று அறிவிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இடைக்காலத் தடை

இந்த வழக்கு கடந்த ஆண்டு மே மாதம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன்,
வி. லட்சுமண நாராயணன் ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்கள் நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தைத் தமிழ்நாடு அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதனையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. வழக்கை உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. விசாரணையில், ‘‘இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க விடுமுறைக் கால அமர்வு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன்?

மீண்டும் விசாரணை

மாநில அரசின் வாதத்தை முன்வைக்க உரிய கால அவகாசம் வழங்கப்படாத ஒரே காரணத்துக் காக மேல்முறையீட்டு மனு அனு மதிக்கப்படுகிறது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பு கிறோம். மாநில அரசு பதிலளிக்க உரிய கால அவகாசம் அளித்து, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு மீண்டும் விசாரிக்க வேண்டும்’’ என்று உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்திருக்கிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *