சென்னை, ஏப். 19- சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யங்களும் இணைந்து ஏப்ரல் 21ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடிவு செய்துள்ளன. இந்த முகாம் கிண்டியில் உள்ள ஒருங்கி ணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். இதில் 8, 10, 12ஆம் வகுப்பு, அய்டிஅய், டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித் தகுதியு டைய அனைவரும் கலந்து கொள்ள லாம். விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை www.tnprivatejobs.tn.gov. எனும் இணையத்தில் பதிவுசெய்ய வேண்டும்.