இலங்கை சிறையில் இருந்த தமிழ்நாடு மற்றும் காரைக்கால் மீனவர்கள் 9 பேர் விடுதலை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ராமேசுவரம், பிப். 4- தமிழ்நாடு, காரைக்கால் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 28ஆம் தேதி நெடுந்தீவு அருகே பாக் நீரிணை கடற்பகுதியில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சந்தியா ஜோசப் என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்தனர்.

படகில் இருந்த மீனவர்கள் அமோஸ்டின், ஜெனிடாஸ், ஜெபஸ்டின் ஆகியோரைக் கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், கடந்த 2ஆம் தேதி காரைக்கால் மீனவர்களின் 2 படகுகளை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், 11 மீனவர்களை கைது செய்தனர். அவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் காவல் நேற்று (3.2.2026) நிறைவடைந்தது. தொடர்ந்து 12 மீனவர்களும் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன், 12 மீனவர்களில் 9 மீனவர்களை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்தார்.

ரூ.35 லட்சம் அபராதம்

மேலும், படகுகளின் ஓட்டுநர்களாக இருந்த 3 மீனவர்களுக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனை மற்றும் இந்திய மதிப்பில் ரூ.34 லட்சத்து 83 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *