‘என் சகோதரர்’ ராகுல் காந்தியின் கேள்விகள்– ஒன்றிய பா.ஜ.க. அரசு ‘அலறல்!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.4 நாடாளுமன்றத்தில் “என் சகோதரர்” ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஏன் மத்தியில் ஆளும் பாஜக அரசு அச்சப்படுகிறது? என தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

சீனா ஆக்கிரமிப்பு, அமெரிக்காவு டனான மோடியின் வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பேச அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வுகள் தொடர்பாக தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:

ஒன்றிய பா.ஜ.க. அரசு, எதிர்க்கட்சித் தலைவரும் எனது சகோதரருமான ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு ஏன் அஞ்சுகிறது?

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொரு ளாதார விவகாரங்களில் தெளிவான விளக்கத்தை அளிக்கவும் வேண்டிய கடமை ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு இருக்கிறது.

எதிர்க்கட்சி எம்பிக்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவிக்கி றேன்; நாட்டு நலனுக்காக பேசக் கூடிய எம்.பி.க்களின் ஜனநாயக உரிமை களைப் பாதுகாக்கும் வகையில் 8 எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *