தலைமைத் தேர்தல் ஆணையர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா தகவல்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப்.04 ‘‘தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்’’ என்று மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா தெரிவித் துள்ளார்.

தேர்தல் ஆணையர்

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்அய்ஆர்) நடைபெற்று வருகிறது. இந்த எஸ்அய்ஆர் பணியை நிறுத்தக் கோரி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் (2.2.2026) தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சந்தித்துப் பேசினர்.

இதன்பிறகு செய்தியாளர்களி டம் மம்தா பேசும்போது, “தலைமைத் தேர்தல் ஆணை யரை சந்தித்த போது அவ மானப்படுத்தப்பட்டோம்” என்று குற்றம் சாட்டினார். எஸ்அய்ஆர் பணியை நிறுத்தக் கோரி மம்தா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த சூழலில் முதலமைச்சர் மம்தா டில்லியில் நேற்று (3.2.2026) செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளாவில் மட்டும் வாக்களர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (எஸ்அய்ஆர்) நடைபெறுகிறது. ஆனால், பாஜக ஆட்சி நடத் தும் அசாமில் எஸ்அய்ஆர் பணி நடத்தப்படவில்லை. ஏனென் றால் அங்கு இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெறுகிறது.

அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்துக்குள் ஏராளமானோர் ஊடுருவி வருவதாக மத்தியில் ஆளும் பாஜக அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந்திய, வங்க தேச எல்லையை பாதுகாக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. ஆனால் ஒன்றிய அரசு, மேற்கு வங்க அரசை குற்றம் சாட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.

மேற்கு வங்கத்தில் நடை பெறும் எஸ்அய்ஆர் பணியால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 58 லட்சம் பேரின் பெயர்கள் வாக் காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அவர் களில் சிலர் தற்போது டில்லிக்கு வந் துள்ள னர். தேவைப்பட்டால் எஸ்அய்ஆர் பணியால் பாதிக்கப் பட்ட லட்சக்கணக்கான மக்களை டில்லிக்கு அழைத்து வருவோம்

நம்பிக்கையில்லா தீர்மானம்

எஸ்அய்ஆர் பணியை நிறுத்தக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு இதுவரை 6 கடிதங்களை அனுப்பி உள்ளேன். இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நேரில் சந்தித்து முறையிட்டோம். அப்போதும் உரிய பதில் கிடைக்கவில்லை.

இப்போதைய சூழலில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம் கொண்டு வர விரும்புகிறோம். ஆனால், எங்களிடம் போதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலம் இல்லை. எனவே, ஒத்த கருத்துடைய கட்சிகளிடம் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு முதலமைச்சர் மம்தா தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *