சீன ஊருடுவல் பற்றி பேச அனுமதி மறுத்ததால் மக்களவையில் அத்துமீறியதாக தமிழ்நாடு எம்.பி.க்கள் 8 பேர் இடைநீக்கம் ராகுல்காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப்.4 மக் களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள் ளனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று உறுப்பினர்கள் பேசி வருகின் றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (2.2.2026) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

8 எம்.பி.க்கள் இடைநீக்கம்

அப்போது, 2020-ஆம் ஆண்டு இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட மோதல் குறித்து, முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவனேவின் நினைவுக் குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்டு வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி பேச முயன்றார். அப்போது, ராகுல் காந்தி அவையைத் தவறாக வழிநடத்துவதாகக் கூறி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது. விவாதத்துக்காகப் பட்டியலிடப்பட்ட தலைப்பில் இந்தியாவோ அல்லது சீனாவோ இடம்பெறவில்லை, எனவே, கொடுக்கப்பட்டுள்ள தலைப்பின் கீழ் பேசும்படி மக்க ளவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார். அதைக் கேட்காமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மக்களவை நேற்று (3.2.2026) கூடியதும், ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அமளியில் ஈடுபட் டனர். அவைத் தலைவரின் இருக்கை அருகில் சென்று ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்கள் காகிதங்களை கிழித்து வீசியதால் பரபரப்பு ஏற் பட்டது.

இதனையடுத்து, மக்கள வையில் அத்துமீறி நடந்து கொண்ட காரணத்துக்காக 374-ஆவது பிரிவின் கீழ் இந்த அமர்வில் இருந்து 8 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்ய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச் சர் கிரண் ரிஜிஜு தீர்மானம் கொண்டு வந்தார்.

ஆர்ப்பாட்டம்

குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஹிபி ஈடன், அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்  மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் மற்றும் குர்ஜித் சிங் அவுஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோல், டீன் குரியகோஸ் உள்ளிட்ட 8 பேர் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவையில் அறிவிக்கப்பட்டது.  ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சி களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் அமளியால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப் பட்டது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலை மையில் இடைநீக்கம் செய்யப் பட்ட அந்த உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.

ஜனநாயகத்துக்கு களங்கம்

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், “3.2.2026 அன்று மக்களவையில் நான் பேசுவதைத் தடுத்தது இந்த அவையின் மரபை மீறும் செயல். அதுமட்டுமல்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் என்ற எனது தகுதியில் தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் நான் பேசு வதைத் தடுப்பதற்கு ஒரு திட்டமிட்ட முயற்சியாகவே இது உள்ளது. இது தீவிரமான கவலையை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு என்பது குடியரசுத் தலைவர் உரையின் ஒரு முக்கிய பகுதியாகும், அதற்கு நாடாளுமன்றத்தில் விவாதம் தேவை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித் துள்ளார்

இந்தியா

குதிரையில் வந்த தாழ்த்தப்பட்ட சமூக இளைஞரான மணமகனை வாள் கொண்டு தாக்கிய உயர்ஜாதியினர் – பெண்களுடன் சேர்ந்து தாக்கிய நிகழ்வு குஜராத் காந்திநகரில் நடந்துள்ளது. 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *