மருத்துவக் கல்லூரியில் என்.ஆர்.அய். கோட்டா என்ற பெயரில் EWS பிரிவில் 497 உயர்ஜாதி பார்ப்பனர்கள் படித்த தில்லுமுல்லு! அதிர்ச்சியூட்டும் மோசடி!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப்.3  நீட் முதுநிலை தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்ற உயர்ஜாதி ஏழை மாணவர்கள் என்.ஆர்.அய். ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது.  3 ஆவது கட்ட கலந்தாய்வு முதுநிலை மருத்துவ படிப்பில் இடம்பெற 811 மாணவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற பிரிவுக்கு மாறினர். என்.ஆர்.அய். ஒதுக்கீட்டுக்கு மாறியதன் மூலம் நீட் தேர்வில் மிக குறைந்த மதிப்பெண் பெற்ற உயர்ஜாதி ஏழை மாண வர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியும்.

மருத்துவ படிப்பில் சேருவதற்காக இந்தியர் என்பதை வெளிநாடு வாழ் இந்தியர் என்று குடியுரிமை தகுதியை மாற்றி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. முதுநிலை நீட் தரவரிசைப் பட்டியலில் 1.50 லட்சம் பேருக்கு பின்னால் உள்ள 497 பேர் என்.ஆர்.அய். ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவபடிப்பில் சேர்ந்து
என்.ஆர்.அய். ஒதுக்கீட்டில் வசூலிக்கப்படும் கோடிக்கணக்கான ரூபாயை செலவிட முன்வந்துள்ளனர்.

உயர்ஜாதி ஏழை பிரிவில் வரும் இந்தி யர்கள், என்.ஆர்.அய். என தகுதியை மாற்றா மல் இருந்திருந்தால் அந்த இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் வந்திருக்கும். நிர்வாக ஒதுக்கீட்டில் சென்றிருந்தால் பல கோடி கட்டணத்துக்கு பதில் குறைந்த கட்டணத்தில் மற்ற மாணவர்கள் சேர வாய்ப்புள்ளது. என்.ஆர்.அய். ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் யாரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்ல. மாறாக என்.ஆர்.அய். ஒதுக்கீட்டில் வந்தவர்கள் எல்லாம் வெளி நாடு வாழ் இந்தியர்களாக உள்ள தங்கள் அத்தை, மாமா ஆதரவில் வளர்ந்ததாக தெரி விக்கப்பட்டுள்ளது.

உயர்ஜாதி ஏழை மாணவர்கள் 145 பேர்

உயர்ஜாதி ஏழை மாணவர்கள் 145 பேர் இவ்வாறு  கோடிக்கணக்கில் கட்டணம் செலுத்தி முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக உயர்ஜாதி ஏழை மாணவர் ஒருவர் ரூ.4.23 கோடி கட்டணம் செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம் உள்ளவர்கள் மட்டுமே உயர்ஜாதி ஏழைகள் ஒதுக்கீட்டில் பயன்பெற முடியும் என்று பெயரளவுக்கான சட்டம்.

நீட் தேர்வில் முறைகேடு நடப்பதற்கு உயர்ஜாதி ஏழை மாணவர்கள் ஒதுக்கீடே சான்றாக மாறி இருப்பதாகவும், முறைகேடு களை தடுக்க நீட் தேர்வை ரத்துசெய்வது மட்டுமே தீர்வாகும் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உயர்ஜாதி ஏழை மாணவர்கள் கோடிக்கணக்கில் கட்ட ணம் செலுத்தியது குறித்து விரிவான விசா ரணை நடத்த பல்வேறு தரப்பினர் வலி யுறுத்தியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *