புதுடில்லி, பிப்.2 தொழிற்சங்கங்களால் தொழில் வளர்ச்சிக்குக் கேடு என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஒரு கோரிக்கை.
உச்சநீதிமன்றம் இந்த கோரிக்கையை அலசி ஆராய்ந்து இப்படி சொல்லி இருக்கிறது.
‘‘இந்த தொழிற்சங்கங்கள் தான் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கேடு. இவர்களால் எத்தனை தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கு தெரியுமா..? அவர்கள் வேலை செய்யவே விரும்புவதில்லை.’’
உழைக்கும் மக்களுக்கு எதிராக பாசிசம் தனது உச்ச பட்ச வெறியைக் காண்பிப்பதற்கு ஏதுவாக தலைமை நீதிபதி கருத்துகளை தெளித்திருக்கிறார்.
தலைமை நீதிபதியின் இந்த ஆவேசத்தை வெளியிடாமல் ஊடகங்கள் மவுனம் சாதிக்கின்றன.
தொழில் வளர்ச்சி வேண்டுமானால் தொழிற்சங்கங்களைத் தடை செய்ய வேண்டும் என்று ஆட்சியில் இருப்போர் பேசத் தொடங்குவார்கள். சங்கம் வைக்க அனு மதிக்காமல் சண்டித்தனம் செய்த சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கு கொண்டாட்டம் தான்.
தொழிலாளர் நலன் காக்க சங்கம் வைத்து போராடுவதற்கு அரசியலமைப்பு அனுமதிக்கும் போது, தொழிற்சங்கங்களுக்கு எதிராக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது, ஆபத்தான செயல்.
தொழிலாளர் போராட்டங்களை ஆட்சியா ளர்கள் கண்டு கொள்ளாத போக, தொழிற்சங்கங்கள் நீதிமன்றம் செல்வது வாடிக்கையாக உள்ளது அந்த வழியும் இப்போது அடைக்கப்பட்டுள்ளது.
பாத்திரம் தேய்த்துப் பிழைப்பை நடத்துகிறோம்.. கொஞ்சம் கூலியை உயர்த்திக் கொடுங்கள் என்று கேட்டது கூட மகாக் குற்றம் ஆகிவிடும் போலும்!
