ரூ.40,000 கோடி மோசடி: அம்பானி கம்பெனி மேனாள் இயக்குநர் புனித் கார்க் அதிரடி கைது!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப். 1– ரூ.40,000 கோடி வங்கி மோசடி மற்றும் பணமோசடி வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCOM) நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் புனித் கார்க் அமலாக்கத் துறை அதிகாரிகளால் (ED) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

RCOM, RHFL, RCFL, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் பவர் லிமிடெட் உள்ளிட்ட பல அனில் அம்பானி குழும நிறுவனங்களின் பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக புனித் கார்க் கைது செய்யப்பட்டுள்ளார்.

புனித் கார்க் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் 20 ஆண்டுகள் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். 2017ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் ஆர்சிஓஎம் நிறுவனத்தின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், 2019 ஏப்ரல் முதல் 2025 ஏப்ரல் வரை நிர்வாக பொறுப்பில்லா துறை இயக்குநராகவும் பணியாற்றினார். ரிலையன்ஸ் குழுமம் மீதான பண மோசடி வழக்கில் முக்கிய பங்கு வகித்தவர் புனித் கார்க் என்கிறது அமலாக்கத்துறை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *