மும்பை, ஜன.31 பிராமணர்களை அரசியல் ரீதியாக பின்தங்கியவர்களாகக் கருத வேண்டும் என்று கோரி ‘சமத்துவத்துக்கான இளைஞர்கள் அறக்கட்டளை என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சமூக மற்றும் கல்விரீதியாக முன்னேறிய வகுப்பினராக இருந்தாலும் பிராமணர்களுக்கு, கிராம பஞ்சாயத்துகள் போன்ற அடித்தள ஜனநாயக அமைப்புகளில் மிகக் குறைவான பிரதி நித்துவமே உள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கர நாராயணன் ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்.
