ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் போட்டித் தேர்வு பயிற்சி மய்யங்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் நிதியமைச்சரிடம் கோரிக்கை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜூன்.31 வரவிருக்கும் ஒன்றிய பட்ஜெட்டில் போட்டித் தேர்வு பயிற்சி மய்யங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (GST) 18 சதவீதத்திலிருந்து 5 சதவீத மாகக் குறைக்க வேண்டும் என்று இந்திய பயிற்சி மய்யங்களின் கூட்ட மைப்பு (CCAI) மத்திய அரசை வலியுறுத் தியுள்ளது.

இது தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனை ஜனவரி 28-ஆம் தேதி நேரில் சந்தித்த கூட்டமைப்பின் நிர்வா கிகள், கோரிக்கை மனு ஒன்றை சமர்ப்பித் தனர். அந்த மனுவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

வரி விலக்கு: பயிற்சி மய்யங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் அல்லது அதற்கு முழுமையாக வரி விலக்கு அளிக்க வேண்டும்.

உள்ளீட்டு வரி சலுகை இல்லாமை: உற்பத்தி அல்லது வர்த்தக நிறுவனங் களைப் போலன்றி, பயிற்சி மய்யங் களால் உள்ளீட்டு வரி சலுகை (Input Tax Credit) மூலம் வரியைச் சரிக்கட்ட முடிவதில்லை. இது கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.

பதிவு செய்யப்படாத மய்யங்கள்: அதிக வரி காரணமாக பல சிறிய பயிற்சி மய்யங்கள் பதிவு செய்யாமலேயே இயங்குகின்றன. குறைந்த கட்டணம் என்பதால் பெற்றோர்களும் அத்தகைய மய்யங்களையே நாடுகின்றனர்.

தற்போதுள்ள ரூ. 20 லட்சம் ஜிஎஸ்டி விலக்கு வரம்பு போதுமான தாக இல்லை. வாடகை, ஊதியம் மற்றும் இயக்கச் செலவுகள் அதி கரித்து வருவதால், இந்த வரம்பை ரூ. 1 கோடியாக உயர்த்த வேண்டும். பயிற்சி மய்யங்களின் நிதிச் சுமையைக் குறைப்பதன் மூலம் மாணவர்களுக்கான கல்விச் செலவு குறையும் என்றும், முறைசாரா கல்வி நிறுவனங்களை முறைப்படுத்த இது உதவும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *