சென்னை, ஜன. 31- உயர்கல்வி நிலையங்களில் பல்கலைக்கழக மானி யக் குழுவின் புதிய விதிகள் இதுவரை பல ஆண்டுகளாக வைக்கப்பட்டுவந்த வேண்டுகோளை எதிர்பாராத வகையில் உள்ளடக்கியிருக்கிறது.
இந்திய அளவில் கடந்த 20 ஆண்டுகளாகத்தான் உயர்கல்வி நிலையங் களுக்குள் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினச் சமூகங்களைச் சார்ந்த இருபால் மாணவர்கள் நுழைந்திருக்கிறார்கள். கல்வி நிலையங்களில் அவர்கள் சந்திக்கும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. சக மாணவர் களிலேயே உயர் ஜாதியினர் என்போராலும், ஆசிரியப் பணியாளர்களாலும், கல்வி நிறுவன நிர் வாகத்தினராலும் சொல்லொணாத் துயரங்களுக்கும், புறக்கணிப்புகளுக்கும், மன உளைச்சல்களுக்கும், திட்டமிட்ட கால தாமதங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.
ஏழை, எளிய, கிராமப்புறப் பின்புலங் களிலிருந்தும், முதல் தலைமுறையாகவும், உயர்கல்வி நிறுவனங் களில் பயிலும் மாண வர்கள், இந்தத் தொல் லைகளைத் தாங்க முடியாமல் தங்களையே மாய்த்துக் கொள்ளும் கொடுமை தொடர ்கதையாகியிருக்கிறது. ஆனால், இது குறித்து அந்த நிறுவனங்கள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை; தடுப்பதற் கான முயற்சிகளை மேற் கொள்ளவில்லை. ஒவ்வொரு நிகழ்வையும் தனித்தனியானதாகக் காட்டி, அவற்றை இணைத்துப் பார்ப்பதை மறுதலித்து வந்தார்கள்.
இதற்கு ரோகித் வேமுலா, முத்துக் கிருஷ்ணன், பாத்திமா லத்தீப் என்று நூற்றுக் கணக்கான சான்றுகள் உள்ளன. மாணவர்கள் மட்டுமல்லாமல், ஆசிரி யர்களுக்கும் இத்தகைய நெருக்கடிகள் ஜாதி ரீதியாகத் தரப்படுவதற்கு சென்னை அய்.அய்.டி.டாக்டர் விபின் சந்தித்த நெருக்கடி உள்ளிட்ட வெளிவந்த பிரச்சினைகளே ஓராயிரம் இருக்கின்றன.
இந்தச் சூழலில், மாணவர் அமைப்புகளின் தொடர் குரலுக்கும், கல்வியாளர்களில் சமூகநீதி உணர்வு படைத்தவர்களின் வேண்டுகோளுக்கும் பயன்கிடைத்தது போல, பல்கலைக்கழக மானியக் குழு புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. அவ்விதிகளின்படி, பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரான கல்வி நிறுவனப் பாகுபாடுகளைக் களைவ தற்கான நடைமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும்.
ஆனால், அதற்கெதிராக உயர்ஜாதி மாணவர்கள் என்போர் அவசியமற்ற பிரச்சினையை உருவாக்கி, போராட்டங்கள் நடத்தி, வழக்குத் தொடுத்து, தற்போது அவ் விதிகளுக்கு உச்சநீதிமன்றத்தின் அவசர இடைக்காலத் தடை வரை கொண்டு சென்றி ருக்கிறார்கள்.
இந்திய உச்சநீதி மன்றத்தின் இந்த இடைக் காலத் தீர்ப்பு அதிர்ச்சி தரக்கூடியதாகும். சமூகநீதியை மறைமுகமாக நசுக்குவதற்காக உயர்ஜாதியினர் தொடர்ந்து செய்துவரும் அநீதிகள், சட்டமீறல்கள், விதிமீறல்கள் குறித்து ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. ஆனால், அவசர அவசரமாக இப்படியொரு தீர்ப்பு வழங்கவேண்டிய அவசியமென்ன என்பது நமக்கு விளங்கவில்லை.
1990-ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் அறிக்கையை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் அமல்படுத்திய போதும், 2005-இல் உயர்கல்வித் துறையில் இட ஒதுக்கீட்டை அமல் படுத்தியபோதும், இந்த உயர்ஜாதி மாணவர்கள் என்போர் எதிர்ப் போராட்டம் என்ற பெயரில் சண்டித் தனம் செய்ததையும், அதைப் பயன்படுத்திக் கொண்டு உச்சநீதிமன்றம் சமூகநீதியைத் தாமதப் படுத்தியதையும் நாங்கள் ஒருபோதும் மறந்துவிடவில்லை.
மீண்டும் அதே நாடகத்தை நடத்தலாம் என்று யார் நினைத்தாலும் அதை ஒரு போதும் நாங்கள் ஏற்க மாட்டோம். “நாங்கள் அடிப்பது போல் அடிக்கிறோம்; நீங்கள் அழுவது போல் அழுங்கள்” என்று ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்காமல், உடனடியாக இதற்கு உச்சநீதிமன்றத்தில் உரிய தீர்வு காண வேண்டும் என்று மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN) வலியுறுத்துகிறது.
அனைத்திந்திய அளவில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாண வர்களுக்கு ஆதரவாகப் போராடும் சமூகநீதி, முற்போக்கு மாணவர் அமைப்புகளுடன் இணைந்து இவ் விதிகளை அமல்படுத்தக் கோரி போராட்டங்களை வலுப்படுத்துவதற்கான அவசியத்தை ஒன்றிய அரசு ஏற்படுத்தக் கூடாது என்று வலியுறுத்துகிறோம். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், சமூகநீதியின் மூலம் எங்கள் கல்விக்கும், வளர்ச்சிக்கும் அடித்தளமிட்ட தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் வழியில் போராட்டங்கள் இந்திய அளவில் நடை பெறுவதைத் தவிர்க்க முடியாது என்று தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ராஜீவ்காந்தி, தௌ.சம்சீர் அகமது மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் அறிக்கை விடுத்துள்ளனர். திராவிட மாணவர் கழகம் (DSF) உள்ளிட்ட 14 அமைப்புகள் இக்கூட்டமைப்பில் உள்ளன.
இப்பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உள்ளிட்டோர் அறிக்கை விடுத்துள்ளனர்.
