கண்ணந்தங்குடி, ஜன. 31– 15.1.2026 (தை 1) மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கண்ணந்தங்குடி கீழையூர் பெரியார் படிப்பகம் அருகில் திராவிடர் கழகம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா, திராவிடர் திருநாள், கலைநிகழ்ச்சி, பெரியார் படிப்பகம் 22ஆம் ஆண்டு விழா, மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 22ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா மிக எழுச்சியுடன் நடைபெற்றது.
கலை நிகழ்ச்சி
நல்லாசிரியர் கோ.செந்தமிழ்ச்செல்வி அவர்கள் வழங்கிய கரகாட்டம், சிலம்பாட்டம், கழக பாடல்களுக்கான நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. அ.வெ.கயலின் நடனம் சிறப்புக்குரியதாக அமைந்தது.

மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை விழா
மாலை 6.30 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது. கழக இளைஞரணி தோழர் த.தமிழரசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
பெரியார் சிலைக்கு மாலை
ஊர் முகப்பில் உள்ள பெரியார் சிலைக்கு ப.க. மாநில அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பெரியார் படிப்பகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர் இனியன் அமுதன் மாலை அணிவித்து சிறப்பித்தார்.

எல்.ஜி. படத்திறப்பு
அண்மையில் மறைந்த மொழிப்போர் தளபதி எல்.கணேசன் அவர்களின் படத்தினை பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார். தி.மு.க. பொதுக் குழு உறுப்பினர் திராவிட கதிரவன் எல்.ஜி. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் இராஜதுரை தலைமையுரையாற்றினார்.
ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்ரமணியன், வடக்கு ஒன்றியத் தலைவர் இரா.துரைராசு ஆகியோர் முன்னிலையேற்று உரை யாற்றினர்.
மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் ஆகியோர் தொடக்கவுரையாற்றினர்.
அரியலூர் மாவட்ட கழகத் தலைவர் விடுதலை நீலமேகம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச்செல்வன், ப.க. மாநில அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி, மாவட்டக் காப்பாளர் மு.அய்யனார், ஊராட்சி மன்றத் தலைவர் சி.மாரிமுத்து, மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
மோகனா வீரமணி அறக்கட்டளை பரிசளிப்பு
கண்ணந்தங்குடி மேலையூர் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் கண்ணந்தங்குடி கீழையூர் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் ரா.மதுமிதா, பா.சபரிநாதன், மு.நந்தினி, எஸ்.பவ்யசிறீ, ஆர்.பரணிதரன், ஆர்.சியாமளாதேவி ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கி தி.மு.க. பொதுக் குழு உறுப்பினர் திராவிட கதிரவன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி, அகில இந்திய மகளிர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் சொர்ணா சூரியமூர்த்தி, தஞ்சை துணை மேயர், திமுக மருத்துவரணி மாநில துணைச் செயலாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, திமுக தலைமைக் கழக பேச்சாளர் தொழிலதிபர் இனியன் அமுதன் ஆகியோர் பாராட்டுரையாற்றினார்கள்.
திராவிடர் கழகப் பேச்சாளர் திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் நர்மதா சிறப்புரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் இணைப்புரையாற்றி நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார். எலந்தாசபடி மாணவர் கழக தோழர் க.ஆதவன் நன்றி கூறினார். தஞ்சை மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, மாணவர் கழக மாநில செயலாளர் மு.இளமாறன், அரியலூர் மாவட்ட செயலாளர் கு.கோபாலகிருஷ்ணன், நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் நாதன்.செல்வராசு, பொதுக்குழு உறுப்பினர் இரத்தின.இராமச்சந்திரன், அரியலூர் மாவட்டத் துணைத் தலைவர் மீன்சுருட்டி திலீபன், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக.முருகன், செந்துறை ஒன்றிய செயலாளர் இராசா.செல்வக்குமார் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
திருவோணம் ஒன்றியத் தலைவர் சாமிஅரசிளங்கோ, அரங்க.குமரவேல், கிளைக்கழகத் தலைவர் இரா.செந்தில்குமார், கிளைக் கழக செயலாளர் ப.தாமரைக்கண்ணன், கழக பேச்சாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, ஒன்றிய மாணவர் கழக செயலாளர் செழியன், சோ.இராமகிருஷ்ணன், ஒரத்தநாடு நகரத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர்.
மாவட்ட துணைச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் வெ.நாராயணசாமி, மாவட்ட மகளிரணி தலைவர் கலைச்செல்வி மாநகரச் செயலாளர் இரா.வீரக்குமார், சேதுராயன் குடிக்காடு மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் பிரபாகரன், ஒன்றிய இளைஞரணி திமுக துணை அமைப்பாளர் சிலம்பரசன், மாவட்ட வழக்குரைஞரணி துணை செயலாளர் தவ.ஆறுமுகம், நாகை நகரத் தலைவர் தே.செந்தில்குமார், நகர செயலாளர் சண்.ரவிக்குமார், நாகை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கவிதா, நாகை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் ஜெயப்பிரியா, நாகை மாவட்ட மாணவர் கழக தலைவர் குட்டிமணி, பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, கோட்டூர் ஒன்றிய தலைவர் குமார், இராமலிங்கம், கழக பேச்சாளர் முனைவர் வே.இராஜவேல், புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் துரை.விசுவநாதன், தஞ்சை மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவு தாசன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
