பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பட்டங்களை வழங்கினார். உடன் கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை, பெரியார் கல்விக் குழுமத் தாளாளர் முனைவர் வீ.அன்புராஜ், ஹர்ஷமித்ரா மருத்துவமனை தலைவர் டாக்டர் கோவிந்தராஜ், முனைவர் மல்லிகா, முனைவர் கற்பகம் குமாரசுந்தரி (திருச்சி, 31.1.2026).

பெரியார் மருந்தியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்குக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, பொன்னாடை அணிவித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை, அமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். உடன் பெரியார் கல்விக் குழுமத் தாளாளர் முனைவர் வீ.அன்புராஜ் (திருச்சி, 31.1.2026).

