தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும்
யு.ஜி.சி.-யின் புதிய விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடையா?
ஜாதியை ஒழித்துச் சட்டமியற்ற உச்சநீதிமன்றம் ஆணையிடுமா?
‘‘புதிய ஜாதி ஒழிப்பு வீரர்களின்’’ இரட்டை வேடம் கலைக்கப்படுமா?
யு.ஜி.சி.-யின் புதிய விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடையா?
ஜாதியை ஒழித்துச் சட்டமியற்ற உச்சநீதிமன்றம் ஆணையிடுமா?
‘‘புதிய ஜாதி ஒழிப்பு வீரர்களின்’’ இரட்டை வேடம் கலைக்கப்படுமா?
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் யு.ஜி.சி.யின் புதிய விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடையா? ஜாதியை ஒழித்துச் சட்டமியற்ற உச்சநீதிமன்றம் ஆணையிடுமா? ‘‘புதிய ஜாதி ஒழிப்பு வீரர்களின்’’ இரட்டை வேடம் கலைக்கப்படுமா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
- தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் யு.ஜி.சி.-யின் புதிய விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடையா? ஜாதியை ஒழித்துச் சட்டமியற்ற உச்சநீதிமன்றம் ஆணையிடுமா? ‘‘புதிய ஜாதி ஒழிப்பு வீரர்களின்’’ இரட்டை வேடம் கலைக்கப்படுமா?
- தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
- உயர்ஜாதி மாணவர்கள் சார்பில் வழக்கு!
- மண்டல் பரிந்துரைமூலம் போராடிப் பெற்ற வாய்ப்புகளை வெகுவாகக் குறைத்தனர்!
- சமூகநீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் உறுதிப்பாட்டினால்…
- வரவேற்கத்தக்க முதலமைச்சரின் வலைதளப் பதிவு!
- ஜாதியற்ற ஒரு சமுதாயத்தை ஏற்படுத்துவது அவசியம்!
உயர்ஜாதி மாணவர்கள் சார்பில் வழக்கு!
உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதிப் பாகுபாடு கார ணமாக, ஒடுக்கப்பட்ட மாணவர்களை மன ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் மேலும் வேற்றுமைப்படுத்தி, அவர்களது நியாயமான கல்வி உரிமைகளைப் பறிப்பதும், அதனால் மனமுடைந்த அத்தகைய மாணவர்கள் மன அழுத்தங்களுக்கு ஆளாகி, தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி, மற்றவர்களைப் போலத் தாங்கள் இல்லையே என ஏக்கமுற்று, படிக்கும் வாய்ப்புகளைப் பாதியில் கல்வி நிலையங்களை விட்டு, வெளியேறுவதையும், தற்கொலைகளில் ஈடுபடுவதையும் தடுக்க, இட ஒதுக்கீட்டு முறைகளைச் சரியாகப் பின்பற்றவும், அத்தகைய மாணவர்களுக்கு ஜாதி ரீதியாக, பாகுபாடு காட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், பல்கலைக் கழக மானியக் குழு அண்மையில் கொண்டு வந்துள்ள விதிமுறைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, உயர்ஜாதி மாணவர்கள் சார்பில், ஏதோ தங்களுக்கு இதன்மூலம் பேரழிப்பும், பெரும் இழுக்கும் ஏற்படுவதுபோல மாய்மாலக் கண்ணீர் விட்டு, தற்போது உச்சநீதிமன்றத்தில் அதற்கு இடைக்காலத் தடை வாங்கிய மகிழ்ச்சியில் உள்ளனர்!
மண்டல் பரிந்துரைமூலம் போராடிப் பெற்ற வாய்ப்புகளை வெகுவாகக் குறைத்தனர்!
மக்களில் பெரும்பான்மையோரான எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர், சமூகநீதியினால் கடந்த சில ஆண்டுகளாய் கல்வியில் இட ஒதுக்கீடு பெற்று வருவதற்கு மிகவும் எரிச்சல் அடைந்து, 15(4) பிரிவின் அடிப்படைத் தத்துவத்தின் வேரையே வெட்டுவதுபோல, பொருளாதார அளவுகோலை, அதுவும் ‘உயர்ஜாதி ஏழைகள்’ என்ற ஒரு விசித்திர புதுப் பிரிவை ஏற்படுத்தி, ஏற்கெனவே மண்டல் பரிந்துரைமூலம் போராடிப் பெற்ற வாய்ப்புகளை வெகுவாகக் குறைத்தனர்.
ஒரே வாரத்தில், போதிய விவாதமோ, ஆய்வோ, புள்ளி விவர ஆதாரங்களோ இன்றி, 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு கூடாது என்று முன்பு கூறிய பார்ப்பன, மேல்ஜாதியினர், தங்களுக்கு 10 சதவிகிதம் எண்ணிக்கைக்குமேல் கிடைக்கிறது என்றவுடன், ‘‘50 சதவிகித உச்சவரம்பு, உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்னா யிற்று’’ என்றெல்லாம் பேசுவதே கிடையாது!
இந்த நிலையில், இப்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற வழக்கு உயர்ஜாதியினரின் ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடே தவிர, வேறில்லை.
முன்பு சமூகநீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங், வேலை வாய்ப்பில் மட்டுமே (கல்வியில் கூட அல்ல) 27 சதவிகித ஆணை – மண்டல் குழுவின் பரிந்துரையை செயல்படுத்தியபோது, திட்டமிட்டே டில்லியில் உயர்ஜாதி மாணவர்கள் தீக்குளிப்பது போன்ற கலவர ஏற்பாடுகளை நடத்தினர் உயர்ஜாதி பார்ப்பன ஊடக உதவியோடு!
சமூகநீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் உறுதிப்பாட்டினால்…
ஆனால், சமூகநீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங் அவர்க ளின் உறுதிப்பாட்டினால் அமலாக்கப்பட்டு, பிறகு 9 நீதிபதிகள் அமர்வில் – இந்திரா சகானி வழக்கில், பிரதமர் வி.பி.சிங் ஆணை செல்லுபடியாகும் என்ற முக்கிய தீர்ப்பு கிடைத்தது.
இப்போது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இஸ்லாமியர் போன்றவர்கள் வெகுவாகப் படித்து, வென்று வருவது மனுவின் மைந்தர்களின் கண்களை உறுத்துகிறது.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அனுபவித்த ஏகபோகத்திற்கு எதிர்நிலை வருகிறது என்பதால்தான், இப்படி பொய் அழுகைமூலம் வழக்குத் தொடுக்கின்றனர்.
அதைத் தற்காலிகமாக ஏற்பதுபோல, உச்சநீதிமன்ற அமர்வும் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது சமூகநீதி உணர்வாளர்களால் ஏற்கத்தக்கதல்ல.
வரவேற்கத்தக்க முதலமைச்சரின் வலைதளப் பதிவு!
சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் நடை பெறும் ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இதுகுறித்து தனது வலைதளத்தில் சரியான கருத்துகளை வலியுறுத்தி யிருப்பது வரவேற்கத்தக்கது; மற்றவர்களுக்கு வழி காட்டும், விழிதிறப்புக்குரியதாகவும் அமைந்துள்ளது!
‘‘யுஜிசி புதிய விதிகளில் ஜாதி யப் பாகுபாட்டை ஒழிப்பதும், அச்சட்டக் கத்துக்குள் இதர பிற்ப டுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டி ருப்பதும் ஆதரிக்கத்தக்கது. மண்டல் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியபோது போராட்டம் நடத்திய அதே பிற்போக்கு மனநிலையுடன்தான் யுஜிசி விதிகளுக்கு எதிரான தற்போதைய போராட்டங்களும் அமைந்துள்ளன!’’
ஜாதி ஒழிப்பாளர்களா, இந்த முன்னேறிய வகுப்பினர்?
ஜாதியற்ற ஒரு சமுதாயத்தை
ஏற்படுத்துவது அவசியம்!
ஏற்படுத்துவது அவசியம்!
உச்சநீதிமன்றம் முன்வந்து உடனடியாக ஜாதி ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றி, ஜாதியற்ற ஒரு சமுதாயத்தை ஏற்படுத்த தீர்ப்பு தர முன்வருவதே அவசியம்!
அரசியலமைப்புச் சட்டத்தின் 17 ஆவது பிரிவில் உள்ள ‘‘தீண்டாமை’’ ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை மாற்றி, ‘‘ஜாதி’’ ஒழிக்கப்பட்டுவிட்டது. ‘‘அதை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தாலும், அது தண்டனைக்குரிய குற்றம்’’ என்று அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த, இந்த திடீர் ஜாதி ஒழிப்பு வீராதி வீரர்கள் வற்புறுத்த முன்வருவார்களா?
அத்தகைய ஒரு தீர்ப்புக்கு, ஒன்றிய அரசுக்கு மதிஉரை கூறலாம்.
முன்வருமா உச்சநீதிமன்றம்?
முன்வருவார்களா, இவ்வழக்கின் ‘வழக்காடிகள்?’ பதிலை எதிர்பார்க்கிறோம்!
ஆதிக்கவாதிகளின் இரட்டை வேடம் கலைக்கப் பட்டே ஆக வேண்டும்!
பாதிப்புக்குள்ளான ஒடுக்கப்பட்டோர் அனைவரும் ஓரணியில் ஒன்று திரண்டு, இம்மாதிரி எதிர்ப்புகளை முளையிலேயே கிள்ளி எறிய முன்வரவேண்டும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.1.2026
