லக்னோ, ஜன.29 யு.ஜி.சி. புதிய விதிமுறைகளை எதிர்த்து பார்ப்பன அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடிக்கு எதிராக அவர்கள் ஆக்ரோஷமாக முழக்கமிட்டனர்.
யு.ஜி.சி. கட்டண விதி
உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி ரிதியான பாகுபாட்டைத் தடுப்பதை நோக்கமாக கொண்டு பல்கலைக் கழக மானியக் குழு புதிய விதிமுறைகளை கடந்தவாரம் அறிமுகப்படுத்தி உடனடியாக இது அமலுக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த விதிமுறைகளால் உயர்ஜாதி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி இந்த விதி முறையை உடனடியாக நீக்க வேண்டும் என்றுகூறி உயர் ஜாதி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒன்றிய அரசு உயர்கல்வி நிறு வனங்களில் கொண்டு வந்துள்ள புதிய யு.ஜி.சி. (சமத்துவத்தை மேம் படுத்துதல்) விதிகள் 2026-க்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட் டத்தில் ஆயுதம் ஏந்திய பார்ப்பனர் அமைப்பு (‘சவர்ணா ஆர்மி’) தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மோடிக்கு எதிராக முழக்கம்
இந்த போராட்டத்தின் போது, ஒன்றிய அரசைக் கண்டித்து சவர்ணா ஆர்மி அமைப்பினர் ஆக்ரோஷமான முழக்கங்களை எழுப்பினர். கோண்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட போராட்டக்காரர்கள், புதிய சட்ட நகல்களை எரித்துப் போராடினர். மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய முழக்கத்தை எழுப்பினர். இந்த முழக்கம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், 2027 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியி ருக்கும் என அவர்கள் எச்சரித்தனர்.
கோண்டா மட்டுமல்லாது லக்னோ, கான்பூர் மற்றும் பிரயாக் ராஜ், காசியாபாத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இந்தூர், குவாலியர் உஜ்ஜைன் போபால் தலைநகர் டில்லியில் யு.ஜி.சி. அலுவலகம் முன்பும் இத்தகைய போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின் றன. இந்த விவகாரத்தில் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்பைத் தணிக்க, யு.ஜி.சி. அதிகாரிகள் போராட் டக்காரர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன.
