2040-க்குள் நெகிழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு இரு மடங்காகும் ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜன.29- உலகளவில் நெகிழி (பிளாஸ்டிக்) மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதை மய்யமாகக் கொண்டு, ஆண்டு தோறும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுகிறது.

இன்று எந்தளவுக்கு நவீனம் மனித வாழ்க்கைக்கு உதவுகிறதோ, அதே அளவுக்கு சுற்றுச்சூழலுக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் கெடுதலை உண்டாக்குகிறது.

நெகிழிக் கழிவுகள் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக மண்ணில் தங்கி சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், இயற்கைக்கும் பேராபத்தை விளை விக்கின்றன. நெகிழி உற்பத்தி மற்றும் அப்புறப்படுத்துதல் ஆகியவை காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணிகளாக விளங்குகின்றன.

இந்நிலையில், லான்செட் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் வெளியான விவரத்தில் கூறியிருப்பதாவது:

நெகிழியில் உள்ள ரசாயனங்கள் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் ஆகியவை ஆஸ்துமா, புற்றுநோய், மாரடைப்பு, நீரிழிவு, ஹார்மோன் சமநிலையின்மை ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.

கருப்பையில் உள்ள சிசு முதல் முதுமை வரை அனைத்து நிலைகளிலும் நெகிழி மாசுபாடு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நெகிழி மாசுபாட்டினால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்கு உலகளவில் ஆண்டுக்கு குறைந்தது 1.5 டிரில்லியன் டாலர் செலவாகிறது. தற்போது நெகிழி உற்பத்தி பல நூறு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

தயாரிக்கப்படும் நெகிழிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவானவையே மறு சுழற்சி செய்யப்படுகின்றன. இதனால் 8,000 மெகா டன்கள் நெகிழி கழிவுகள் பூமியை மாசுபடுத்துகின்றன.

வரும் 2040 ஆம் ஆண்டுக்குள் நெகிழி மாசுபாடுகள் இரு மடங்கிற்கும் அதிகமான சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் என்றும், அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் புவி வெப்பமடைதல், காற்று மாசுபாடு மற்றும் நச்சுத்தன்மை வெளிப்பாடு ஆகியவை அதிகரிக்கும் என அந்த ஆய்வு எச்சரிக்கை விடுக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *