மதம் மாறினால் மட்டும் இட ஒதுக்கீடு கிடைத்து விடாது! உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜன.29 அரியா னாவைச் சேர்ந்த நபர் ஒருவர், பொதுப் பிரிவில் இருந்து பவுத்த மதத்திற்கு மாறியதன் அடிப்படையில் சிறுபான் மையினர் இட ஒதுக்கீடு கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த விசாரணையின் போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் மற்றும் வழங்கிய உத்தரவுகள் வருமாறு:

விசாரணையின் போது, மனுதாரரின் பின்னணி குறித்து தலைமை நீதிபதி  நேரடியாகக் கேள்வி எழுப்பினார்:

தலைமை நீதிபதி: நீங்கள் ஒரு ‘புனியா’ (Punia) சமூகத்தைச் சேர்ந்தவர். நீங்கள் எப்படி சிறு பான்மையினர் இட ஒதுக்கீடு கோர முடியும்? நீங்கள் எந்த வகை ‘புனியா’?

வழக்குரைஞர்: நான் ‘ஜாட் புனியா’ (Jaat Punia) சமூகத்தைச் சேர்ந்தவன்.

தலைமை நீதிபதி: ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர் எப்படி சிறுபான்மையினர் என்று சொல்ல முடியும்?

வழக்குரைஞர்: நான் பவுத்த மதத்திற்கு மாறிவிட்டேன். அது எனது உரிமை, அதன் அடிப்படை யில் சலுகை கோருகிறேன்.

இதைக் கேட்டு அதிர்ச்சி யடைந்த நீதிபதி காந்த், “இது ஒரு புதிய வகை மோசடி” என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், அரியானா மாநில தலைமைச் செயலாளருக்குச் சில முக்கிய விளக்கங்களைக் கேட்டு உத்தரவிட்டுள்ளது:

வழிகாட்டுதல்கள் என்ன?: சிறுபான்மையினர் சான்றிதழ் வழங்குவதற்கான தெளிவான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு தல்கள் என்னென்ன?

பொதுப் பிரிவினர் சலுகை பெற முடியுமா?: பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) மேல் உள்ள, ஒரு உயர் வகுப்பு பொதுப் பிரிவு வேட்பாளர், மதம் மாறிய காரணத்திற்காக மட்டும் இந்தச் சலுகையைப் பெற முடியுமா?

முரண்பட்ட தகவல்கள்: கடந்த விண்ணப்பங்களில் தங்களை ‘பொதுப் பிரிவு’ (General Category) என்று குறிப்பிட்டுவிட்டு, தற்போது திடீரென ‘பவுத்த சிறுபான்மையினர்’ என்று அறிவிப் பதை எப்படி ஏற்க முடியும்?

சலுகைகளுக்காக மட்டுமே மதம் மாறுவது போன்ற செயல்பாடுகளை அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், சிறுபான்மையினர் அடிப்படையில் சேர்க்கை கோரிய அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *