மாற்றத்துக்கு தயாராகும் தாய்லாந்து: மன்னராட்சிக்கு எதிராக நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் இளைஞர்கள்!

2 Min Read

பாங்காக்,ஏப்.21 தாய்லாந் தில் பல ஆண்டுகளாக மன் னர் ஆட்சி முறை வழக்கத்தில் உள்ளது. தற்போது தாய் லாந்து மன்னராக வஜ்ரலாங்கோர்ன் உள்ளார். தாய்லாந்து மன்னராக இருந்த பூமிபோல் அதுல் யதேஜ் கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவ ரைத் தொடர்ந்து, அவரின் மகனாக வஜ்ரலாங்கோர்ன் மன்ன ராவதற்கு எதிர்ப் புகள் கிளம்பின. இருப்பினும் அவர் மன்னரானார். 

இந்த நிலையில்தான் 2019இல் வஜ்ரலாங்கோர்ன் தனது காதலி களுடன் வலம் வரும் ஒளிப்படங்கள் வெளி யாகி தாய்லாந்தில் சர்ச் சையை ஏற்படுத்தியது. மேலும் நான்காவது மனை வியாக தனது பாதுகாவலரை வஜ்ரலாங் கோர்ன் மணந்து கொண்டது அவரை மேலும் விமர்சனத்துக்கு உள்ளாக் கியது. பதவி மற்றும் செல் வத்தை மட்டுமே வஜ்ரலாங் கோர்ன் விரும் புகிறார். மக்களின் நலனில் அவருக்கு அக்கறை இல்லை எனவும் விமர்சிக்கப் பட்டது. இது தொடர்பாகவே மாணவ அமைப் பினர் 2020இல் மன்னர் ஆட்சிக்கு எதிராகவும், ராணுவத்துக்கு எதி ராக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தப் போராட்டத்தை முன்னெ டுத்தவர்களில் முக்கிய மானவரான இளம் பெண்ணான சோந்திச்சா ஜாங்க்ரூ (வயது 30) தாய் லாந்து நாட்டின் மன்னருக்கு எதிராக போராடியதற்காக சிறைத் தண்ட னையும் பெற் றார். அவர் தாய்லாந்தின் முன்னேற்ற கட்சி சார்பாக மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட் டியிட இருக்கிறார். இவருடன் மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய இன்னும் சிலரும் நாடா ளுமன்றத் தேர்தலை நம் பிக்கையுடன் எதிர்கொள்ள உள் ளனர்.

இந்தத் தேர்தலுக்காக தீவிரமாக தேர்தல் பரப் புரையில் ஈடுபட்டு வருகி றார். இதுகுறித்து சோந் திச்சா கூறும்போது, “நீங்கள் மாற்றத்தை விரும்பினால் வெறும் போராட் டத்தை மட்டும் நடத்திக் கொண் டிருக்க முடியாது. நாடாளுமன்றத்தை மட் டுமே சார்ந் திருக்க முடியும். இரண்டும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

தேர்தலை எதிர்கொள்ளும் மற்று மொரு மாணவ சமூக செயற் பாட்டாளர் டோடோ (வயது 32) கூறும்போது, “நான் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நிற்பதற்கு காரணம் வெறும் போராட் டங்கள் மட்டும் போதாது என்று நான் உணர்ந்து இருக்கிறேன். மாற்றங் களைச் செய்வதற் கான அதிகாரத்தை ஜன நாயக ரீதியாக வழங்குவதற்கு மக்களிட மிருந்து எங்களுக்கு உதவி தேவை” என்று தெரிவித்துள்ளார்.

மன்னாராட்சிக்கு எதிராக போராடி தற்போது தேர்தலை எதிர் கொண்டுள்ள மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு, மக்களிடம் அதி கரித்து இருப் பதாக ஊடகங்களும் கணித்து செய்தி வெளியிட்டுள்ளன. தாய்லாந்தின் மன்னர் மற்றும் ராணுவ ஆட்சி வர லாற்றில் இந்த மாணவ இயக்கங்கள் புதிய நம்பிக்கை விதையை மக்கள் மனதில் விதைத்து வருகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *