திஸ்பூர், ஜன.28 அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது ஆட்டோ பயணக் கட்டணம் தொடர்பாக குறிப்பிட்ட சமூகம் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
உரையின் முக்கிய அம்சம்
நிகழ்ச்சியில் பேசிய அவர், பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சிலவற்றைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
“நீங்கள் ஆட்டோவில் பயணம் செய்யும் போது, அந்த ஓட்டுநர் ஒரு முஸ்லீம் என்று உங்களுக்குத் தெரிந்தால், அவரிடம் கட்டணத்தைக் குறைத்துக் கொடுங்கள். அவர் 5 ரூபாய் கேட்டால், நீங்கள் 4 ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு, பின் னால் திரும்பிப் பார்க் காமல் அங்கிருந்து சென்று விடுங்கள்.
முதலமைச்சரின் இந்தப் பேச்சு மத ரீதியான பாகுபாட்டைத் தூண்டும் வகையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாகுபாடு
அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு முதலமைச் சர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த உழைப்பாளர்களிடம் இப்படி நடந்து கொள்ளச் சொல்வது முறையல்ல என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த காட்சிப்பதிவு பரவியதைத் தொடர்ந்து, “முதலமைச்சர் பேசும் பேச்சா இது?” என்ற கேள்வியுடன் பலரும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அசாம் பா.ஜ.க. முதலமைச்சர் தரப்பிலிருந்து கூறியதில்…. நகைச்சுவையாக இதைக் கூறியுள்ளாராம்! இதனை பெரிதுபடுத்தவேண்டாம் என்று விளக்கம் தெரிவித் துள்ளது. எப்படி இருக் கிறது?!
