மாமல்லபுரம், ஏப் .21 மாமல்லபுரம் சிற் பக் கல்லூரி மூடப்படாது என்றும், அந்தக் கல்லூரிக்கு புதிதாக 22 பேராசிரியர்களை நிய மிப்பதற்கு நடவ டிக்கை எடுக்கப்பட் டுள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர்தங்கம் தென்னரசு கூறினார்.
சட்டப்பேரவையில் 20.4.2023 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் பேசுகையில், மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கல்லூரி மிகவும் பழைமையான கல்லூரி. அங்கு படித்தவர்கள் தான் தமிழகம் முழுவதும் உள்ள சிலைகளை வடிப் பதற்கு முன்னோடியாக உள்ளனர். ஆனால், அந்தக் கல்லூரியில் தற்போது 4 பேராசிரியர்கள்தான் உள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அடிப்படை வசதியும் இல்லாமல் மூடப்படும் அபாயத் தில் உள்ளது என்றார்அதற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குறுக்கிட்டுக் கூறியது: மாமல்லபுரம் சிற்பக் கல்லூரிக்கு 22 பேராசிரியர்களை நியமிப்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஏற்கெனவே முன்மொழி யப்பட்டுள்ளது. மிக விரைவில் ஆசிரியர்பணியிடங்கள் நிரப்பப்படும். அந்தக் கல்லூரியை மூடுவதற்கான எந்தவிதமான அபாய சூழலும் இல்லை என்றார்.
ஒரே இடத்தில் 89 நடுகற்கள் கண்டுபிடிப்பு
ஓசூர், ஏப்.21 ஓசூர் அருகே ஒரே இடத்தில் 89 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் பக்கமுள்ள கூலி சந்திரம் கிராமத்தில் ஒரே இடத்தில் 89 நடுகற்களை அறம் வரலாற்று ஆய்வு மய்ய குழுவை சார்ந்த அறம்கிருஷ்ணன், மஞ்சுநாத், முனிகிருஷ்ணப்பா ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
தமிழ்நாடு நடுகற்கள் வரலாற்றில் அதிக நடுகற்கள் இருப்பது மட்டுமில்லாமல், அதிக நடுகற்கள் தொகுப்பு இருப்பதும் கிருஷ்ணகிரி மாவட்டம் தான். இம் மாவட் டத்தில் 8-ஆம் நாற்றாண்டு தொடங்கி 18-ஆம் நூற்றாண்டு வரையிலான நடுகற்கள் தொடர்ச்சியாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன. 18-ஆம் நூற்றாண்டு கெலமங்கலத்தில் இருந்து பாரந்தூர் செல்லும் சாலையில் கூலிசந்திரம் என்ற சிற்றூர் உள்ளது. பல ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து ஊர் விழாக்கள் செய்யும் பொது இடத்தில் இந்த 89 நடுகற்களும் சிதறிக் கிடக்கின்றன. நடுகற்கள் தொகுப்பு என்பது மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருக்கின்றன. ஓசூர் தேர்பேட்டை, நாகொண்டபள்ளி, சிங்கிரிப்பள்ளி, பிக்கனப்பள்ளி, குடி செட்லு, கொத்தூர், ஒன்னல்வாடி, உளிவீரனபள்ளி, பெண்ணேஸ்வர மடம், சின்ன கொத்தூர், தொகரப்பள்ளி உள்ளிட்ட 25-க்கும் மேற் பட்ட இடங்களில் நடுகற்கள் இருக்கின்றன.
தற்போது கூலிசந்திரத்தில் 89 நடுகற்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இங்கு இருக்கும் நடுகற்கள் குரும்பர் இனமக்கள் வழிபடும் 14 ஆம் நூற்றாண்டு தொடங்கி 18-ஆம் நூற்றாண்டு வரையிலான நடுகற்கள் ஒரே இடத்தில் சிதறி கிடக்கின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மகத்தான மனிதநேயம் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் கொடை
திருவாரூர், ஏப்.21 திருவாரூர் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் கொடையாக அளிக்கப்பட்டன. திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அண்ணாமன்றம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 38). இவரது மனைவி சோபியா (32). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஜெயசீலன் திருவாரூர் அருகே புலிவலத்தில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை வைத்திருந்தார். சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார். பின்ன வாசல் பகுதியில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
உடல் உறுப்புகள் கொடை
ஜெயசீலன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை உறவினர்கள் கொடை அளிக்க முன்வந்தனர். இதற்காக திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் உரிய சான்றுகள் பெறப்பட்டது. குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகள் கொடை செய்யப்பட்டன. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் நேரில் சென்று சென்னை, திருச்சி மற்றும் இதர மருத்துவமனைகளில் இருந்து வந்திருந்த மருத்துவ குழுவினருடன் இணைந்து ஜெயசீலனின் கல்லீரல், இதயம், கண், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உடல் உறுப்புகளை பிரித்து எடுத்து உரிய ஆஸ்பத்திரிகளுக்கு எடுத்துச்சென்றனர். உறுப்பு கொடைக்கு பின்னர் ஜெயசீலனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. இந்த விபத்து குறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.