திருவரங்கம், ஜன. 27- திராவிடர் கழக வழக்குரைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் சமத்துவ நடைப்பயணத்தில் கலந்து கொள்ள வந்தபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் அறிவுறுத் தலுக்கேற்ப ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் 14.01.2026 அன்று திருச்சி திருவரங்கத்தில் உள்ள மறைந்த சித்தார்த்தன் இல்லம் சென்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த வழக்குரைஞர் சித்தார்த்தன் அவர்களின் தாயார் திருமதி கல்யாணிமுத்து, சகோதரி அன்புமணி, நீதிபதி சுபா, மைத்துனர் மணிவண்ணன், மனைவி வழக்குரைஞர் சுஜாதா, மகள் யாழினி ஆகியோரிடம் வைகோவின் சார்பில் ஆறுதல் தெரிவித்தார்.
ம.தி.மு.க. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் டி.டி.சி.சேரன், பகுதிச் செயலாளர்கள் ஜெயசீலன், சீ.இராமமூர்த்தி, வைகோ அவர்களின் உதவியாளர் வெ.அடைக்கலம், பொறியாளர் ஸ்டீபன் சுரேஷ்குமார், ரெங்கராஜ், தமிழ், திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஆரோக்கியராஜ், மற்றும சீனி.விடுதலை அரசு, பிரபாகரன் ஆகியோர் அப்போது உடன் இருந்தார்கள்.
