டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* என்.டி.ஏ. கூட்டணியில் சேர அரசியல் கட்சிகளைக் கட்டாயப்படுத்தும் பாஜக-மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
* மம்தா விரைவில் பயணம், வாக்காளர் சிறப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க கூட்டணி அமைக்க முடிவு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* வாக்காளர் சிறப்புத் திருத்தம், மதவாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அய்தராபாத்தில் நடைபெற்ற அகில இந்திய ஜனநாயக மகளிர் மாநாட்டில் கண்டன தீர்மானம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எஸ்.என்.டி.பி. யோகம் தலைவர் வெள்ளப்பள்ளி நடேசனின் ஆதரவுடன் முன்மொழியப்பட்ட கேரளாவின் இந்து ஒற்றுமை முன்னணி, அரசியல் நோக்கம் குறித்து சந்தேகம் உள்ளது என காரணம் காட்டி நாயர் சர்வீஸ் சொசைட்டி (என்.எஸ்.எஸ்.) நிராகரிப்பு.
* ஜாதிவாரி கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுடன் அரசு ஆலோசனை நடத்த வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்
தி இந்து:
* வாரத்திற்கு 2 நாள் விடுமுறை கோரி வங்கி ஊழியர்கள் இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம்: சேவைகள் பாதிக்கும்
* வேலைவாய்ப்பு உத்தரவாதத்தில் கண்ணாமூச்சி ஆட்டம், பொருளாதாரப் பேராசிரியர் ஜீன் டிரஸ். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் பிரதமரின் திட்டங்களின் தொகுப்பாக பெயர் மாற்றப்பட்ட போது நடந்தது போலவே, மோடி அரசாங்கம் இந்தத் திட்டத்தை நடத்தி, அதன் பெருமையை தட்டிச் செல்வதே இந்த புதிய சட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. வேலைவாய்ப்பு உத்தர வாதமும் தொழிலாளர்களின் உரிமைகளும் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்கிறார் பேராசிரியர்.
தி டெலிகிராப்:
* சமஸ்கிருதம்தான் இந்திய மொழிகளின் தாய் மொழியாம்! சமஸ்கிருதம் இந்திய மொழிகளை ஒன்றிணைக்கிறது என ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட தலைவர் சாஸ்திரி தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியக் குழுவின் கருத்துக்கு மொழியியலாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உயர் கல்வி நிறுவனங்களில் சமத்துவம் கட்டாயம்; ஜாதிப் பாகுபாடு காட்டினால் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து: பல்கலைக்கழக மானியக் குழு அதிரடி உத்தரவு. ஜாதி தொடர்பான பாகுபாடு குறித்த புகார்கள் அய்ந்து ஆண்டுகளில் இரு மடங்கிற்கு மேலாக அதிகரித்துள்ள நிலையில் – 2019-2020இல் 173 ஆக இருந்தது 2023-2024இல் 378 ஆக 118.4% உயர்ந்துள்ளதை அடுத்து நடவடிக்கை.
– குடந்தை கருணா
