இந்து அறநிலையத்துறை சட்டம் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் இன்று (27.1.1925)
சென்னை மாநிலத்தில் இரட்டை ஆட்சி முறையின்கீழ் முதன் முதல் நடைபெற்ற 1920ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திட்ட நீதிக்கட்சியின் அமைச்சரவையில் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்த முனைத்தனர். அவற்றின் முக முக்கியமான ஒன்றாக, இந்துசமய அறநிலையங்கள் சட்டத்தினை 27.1.1925 அன்று சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. அதன்மீது நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் நிராகரிப்பு நடவடிக்கைகளை எதிர்கொண்டு 1927 நவம்பரில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்து அறநிலையத்துறை சட்டம் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நாள்தான் இந்நாள்!
