ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர்களுக்கான பட்டமளிப்பு – கலை விழா

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஜெயங்கொண்டம், ஜன.27-  24.01.2026 அன்று காலை 10:30 மணி அளவில் யு.கே.ஜி. மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் கலை விழா பள்ளியின் முதல்வர் இரா.கீதா தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மருத்துவர் அனிதா முத்துக்குமார் பொதுநல மருத்துவர். (அரசு பொது மருத்துவமனை உடையார்பாளையம்) கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினருக்கு பள்ளியின் முதல்வர் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கி சிறப்பித்தார்.

எல்.கே.ஜி. மழலையர்கள் பிஞ்சு விரல்களால் விருந்தினரை வரவேற்று வரவேற்பு நடனம் ஆடினர். அதனைத் தொடர்ந்து நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தைக் காப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி யு.கே.ஜி. மழலையர்கள் ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது. மேலும் 4 மற்றும் 5ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய அய்ந்து இயற்கை நிலைகளையும் மாசடையாமல் பாதுகாக்க வேண்டும் என்பதை நாடகத்தின் வாயிலாக மிக அழகாக எடுத்துரைத்தனர்.ஒன்றாம் வகுப்பில் பயிலும் பெரியார் பிஞ்சுகளின் பிஞ்சு விரல்கள் மண்ணில் பதிய ஆடிய நடனம் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர்.

ஆங்கில நாடகம்

நேற்றைய நினைவுகள் கடந்த காலத்தை நமக்கு கூறுகின்றன, நாளைய கனவுகள் எதிர்காலத்தை காட்டுகின்றன, ஆனால் இன்றே நடக்கும் செயல் தான் உண்மையான வாழ்வு, நிகழ்காலம் தான் நம் வாழ்வின் முக்கிய தருணம், இன்றைய நாள் எவ்வளவு சிறந்தது என்பதை ஆங்கில நாடகம் வழியாக மிக அழகாக உணர்த்தினர். இரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவிகள் தலைமுறை தாண்டி, தரணி முழுவதும் சொல்கின்ற பாரம்பரிய நடனத்தை அழகாக ஆடினர். உணவு வீணாவதை தவிர்த்து தேவை உள்ளவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை மவுன மொழி நாடகத்தின் மூலம் மிக அழகாக எடுத்துரைத்தனர்.

கலை நிகழ்ச்சிகள்

மேற்கத்திய தாளம் மனதை கவர மேடை எங்கும் மகிழ்ச்சி பொங்க மூன்றாம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகளின் மேற்கத்திய நடனம் பார்வையாளர்களைக் கவர்ந்தது. கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் தன் சிறப்புரையில் கலை நிகழ்ச்சி நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற நாடகம், உணவுப் பாதுகாப்பு பற்றிய (Food safty), மழலையர்களின் நடனம் ஆகிய அனைத்தும் சிறப்பாக இருந்தன. மேலும் .நான் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு தான் பட்டம் வாங்கினேன். ஆனால், இன்று யு.கே.ஜி. குழந்தைகளுக்கு பட்டம் அளிக்கும் விழா கல்வியின்   வளர்ச்சி நிலை குறித்து மகிழ்ச்சியாக உள்ளது. குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்களின் பங்கு அளப்பரியது.  சுற்றுப்புற சூழ்நிலை, வெளிப்பாதுகாப்பு ஆகியவற்றை சரியாக அமைத்துக் கொடுக்க வேண்டும். குழந்தைகளின் உணவுப் பழக்கம் மற்றும் அலைபேசியின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு உறவுகளுக்கு மதிப்பு வழங்க வேண்டும் . குழந்தைகள் கேட்டவற்றை அனைத்தும் வாங்கிக்கொடுத்து செல்லம் கொடுக்காமல் குடும்பச் சூழலையும் உணரும் வகையில் வளர்ப்பதின் அவசியத்தையும் பெற்றோர்களுக்கு எடுத்துரைத்தார்.

சான்றிதழ்கள் வழங்கல்

குடும்பச் சூழ்நிலையை பிள்ளை களுக்கு புரிய வைத்து வளர்க்க வேண்டும். என்று  தன் உரையில் கூறினார். அதனைத் தொடர்ந்து மழலைச் செல்வங்களுக்கு பட்டங்களையும் சான்றிதழ்களையும்  வழங்கி தன் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார் இவ்விழாவில்  பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு கலை விழாவையும் யு.கே.ஜி. மாணவர்களின் பட்டமளிப்பு விழாவையும் கண்டு களித்தனர் மாணவி நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன்  விழா இனிதே நிறைவடைந்தது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *