திருவள்ளூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை மய்யத்திற்கு நேற்று (5.11.2023) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் முன்னிலையில் அம்மய்யத்தில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் திருவள்ளுவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ஜெ.ரேவதி, அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.