சென்னை, ஜன. 26- நெல்லை மாவட்டத்தில் உள்ள சிறிய கிராம மான பாப்பையாபுரம் என்ற ஊர் மற்றும் நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளியை மய்யமாக வைத்து எழுதப்பட்ட ‘புதரில் பூத்த புதுமலர்’ என்ற நூல் வெளியிட்டு விழா சென்னை பெரியார் திடல் மணியம்மையார் அரங்கில் 25.01.2026 அன்று நடைபெற்றது.
இந்த நூலை அந்த ஊரைச்சேர்ந்த முனைவர் சு தர்மராஜ் எழுதி அதன் முதல் பிரதியை கலைமாமணி மு.பாலசுப்பிரமணியம் வெளியிட திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரசு பெரியார் பெற்றுகொண்டார்.
இந்த நிகழ்வில் மும்பையில் இருந்து வருகைபுரிந்த புதியமாதவி, அறுவைசிகிச்சை வல்லுநரும் மருத்துப் பேராசிரியருமான டார்வின், மேனாள் தலைமை ஆசிரியர் லட்சுமி பிரேமா, திரைப் படப் பாடலாசிரியர் முருகன் மந்திரம், தொழிற்சங்கத் நிர்வாகி தஞ்சை தவசி, எழுத்தாளர் அமிர்தம் சூரியா, க.பொன்னம்பலவாணன் கழக மகளிர் பாசறை வடசென்னை மாவட்ட பொறுப்பாளர்மரகதமணி ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
‘புதரில் பூத்த புதுமலர்’ நூல் வெளியீடு
Leave a Comment
