சிவகங்கை, ஜன. 26- சிவகங்கை மாவட்ட கழகக் கலந்துறவாடல் கூட்டம் 24.1.2026 அன்று சிவகங் கையில் காலை 11 மணிக்கு தொடங் கியது.
மாவட்டத்தலைவர் இரா.புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம், பெரியார் பெருந் தொண்டர் வேம்பத்தூர் க.வீ.செயராமன், மாவட்ட ப.க. தலைவர் சு.இராசாங்கம்,மாவட்ட அமைப்பாளர் ச.அனந்தவேல், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கார்த்தி,ஆகியோர் கருத்துரை வழங் கினார்கள்.
பெரியார் உலகமயம்-உலகம் பெரியார் மயம் என்ற இலட்சிய திட்டத்தைஉள்ளத்தில் ஏந்தி ஓய்வின்றி உழைத்து வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பெருவிருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பெரியார் உலகத்திற்கு மாவட்டக்கழகம்சார்பில் ரூ.10 இலட்சம் நிதி திரட்டியளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
பெரியார் உலக
நிதியளிப்பு விழா
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பிஜேபிஆட்சி இதுதான் திராவிடம் -திராவிடமாடல் ஆட்சி தொடர் பரப்புரைக் கூட்டத்தினை மாவட்டக் கழகம் சார்பில் மானாமதுரையில் நடத்துவதற்கு அனுமதி வழங்கி பங்கேற்க வேண்டுமாறு தமிழர் தலைவர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
சிவகங்கை, திருப்பத்தூர், திருபுவனம் ஆகிய ஊர்களில் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா, நூல் அறிமுக விழா நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பெரியார் உலகத்திற்கு ஒரு இலட்சம் வழங்கி சிறப்பித்த மாவட்ட ப.க. தலைவர் சு.இராசாங் கத்திற்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
