இந்தியாவின் சுற்றுச் சூழல் பாதிப்பும் – பொருளாதார வளர்ச்சியும்?

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டுச் சூழல் குறித்து பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF) துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத்  ஒரு முக்கிய கவலையை எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் முதலீடுகளை ஈர்ப்பதில் உள்ள சவால்கள் குறித்துப் பேசும்போது, சுற்றுச்சூழல் மாசு (Pollution) ஒரு பெரும் காரணியாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கான முக்கிய காரணங்கள்:

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் சுமார் 18% மரணங்கள் காற்று மாசினால் ஏற்படுகின்றன என்பது மிகவும் வருத்தத்திற்குரிய தகவல்! மாசடைந்த காற்றால் தொழிலாளர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், அவர்களின் உற்பத்தித் திறனும் குறைகிறது. இது ஒட்டுமொத்த ஜிடிபி (GDP) வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒரு நாட்டில் முதலீடு செய்யும் போது, அங்குள்ள வாழ்க்கைத் தரம் மற்றும் சுற்றுச்சூழலையும் கருத்தில் கொள்கின்றனர். கடுமையான காற்று மாசு நிலவும் ஒரு நாட்டில் நீண்ட கால முதலீடுகளைச் செய்ய அவர்கள் தயங்குவதாகக் கருதப்படுகிறது.  சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியாவின் முதலீட்டுத் தகுதியைக் கேள்விக்குறியாக்குவதாக கீதா கோபிநாத் எச்சரித்துள்ளார்.

கீதா கோபிநாத் போன்ற பன்னாட்டுப் பொருளாதார வல்லுநர்கள் சுற்றுச்சூழல் மாசு மற்றும் மனித வள பாதிப்பு குறித்துப் பேசும்போது, அது வெறும் புள்ளிவிவரமாக மட்டும் பார்க்கப்படாமல், நாட்டின் நீடித்த நிலையான வளர்ச்சி குறித்த ஓர் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.

அரசுத் தரப்பில் ‘முதலீடுகள் குவிகின்றன’ என்று கூறப்பட்டாலும், கள நிலவரத்தில் பின்வரும் சவால்கள் இருப்பதை பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

18% மரணங்கள் மாசினால் ஏற்படுகின்றன என்பது ஓர் நாட்டின் மனித வளத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதலாகும். நோயுற்ற மனித வளத்தைக் கொண்டு ஒரு நாடு பொருளாதார வல்லரசாக முடியாது. வெறும் கட்டடங்களும், சாலைகளும் மட்டும் முதலீட்டை ஈர்க்காது; சுவாசிக்கத் தூய்மையான காற்று, நீர் மற்றும் ஆரோக்கியமான சூழல் இருந்தால் மட்டுமே நீண்டகால முதலீடுகள் தங்கும்.

பெரும்பான்மை ஊடகங்கள் பல நேரங்களில் அரசின் திட்டங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தும் போது, இது போன்ற பன்னாட்டு அமைப்புகளின் (IMF) அறிக்கைகள் உண்மையான நிலையை வெளிக்கொண்டு வரும்  தெளிவான “கண்ணாடி”களாகச் செயல்படுகின்றன. இது பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

மோடியின் பாஜக ஆட்சியில் விலைபோன பெரும்பான்மையான ஊடகங்கள் 11 ஆண்டுகளாக முழுக்க முழுக்க வதந்திகளை மட்டுமே கூறி, மக்களை ஏமாற்றி வந்த நிலையில், கீதா கோபிநாத்தின் இந்த அறிவிப்பு  மோடி சொல்லுவதையும் – ஆதரவு அமைப்புகளின் போலி பரப்புரையின் முகத்திரையையும் கிழிக்கின்றது.

சுற்றுச்சூழல் பாதிப்பு, காற்று மாசு என்பதெல்லாம் பெரும்பாலும் மதம் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளால் தான் ஏற்படுகின்றன.

இராமன் கோயில் கட்டுமானம், கும்பமேளா என்பதெல்லாம் பொது மக்கள் எண்ணிக்கையை ஓரிடத்தில் பெருமளவில் திரளச் செய்து, சுற்றுச் சூழலையும், காற்று மாசையும் ஊதிப் பெருக்குகின்றன.

மூலப் பொருட்களான விவசாயம், சுரங்கத் தொழில் மீன்பிடித்தல் மற்றும் கட்டுமானங்கள் ஆகிய அனைத்தும் நிலம், நீர் மற்றும் கனிம வளங்களையே நம்பியுள்ளன.

மதப் பண்டிகைகள் குறிப்பாக, கும்பமேளா போன்றவை சுற்றுச்சூழலை மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.

நீர் மாசு, காற்று மாசு மற்றும் கழிவுச் சிக்கல்களால் சுற்றுச்சூழல் மிகக் கடும் பாதிப்பு அடைகின்றது.

கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்பது – அதன் விளைவாக கங்கை, யமுனை நதிகளில் பூஜைப் பொருட்கள், சோப்பு, மனிதக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவை கலந்து ஃபீக்கல் கோலிஃபார்ம்  பாக்டீரியா நுண்ணியிரிகளை அதிகரிக்கச் செய்கின்றன.

அதனால் மாசடைந்த நீர் குளிக்கவோ, குடிக்கவோ  தகுதியற்றதாகி விடுகின்றது.

மேலும், கழிவுகளோ 20 ஆயிரம் டன் முதல் 30 ஆயிரம் டன் வரை உருவாக்கப்படுகின்றன.

இவ்வகையில், ஆன்மிகத் தலங்கள் பெரும்பாலும் சுற்றுச் சுழலுக்கும், தூய்மையான காற்றுக்கும் பெரும் சவால்களாக உள்ளன. இதைப்பற்றியெல்லாம் சிறிதும் கவலை கொள்ளாமல் ஒன்றிய அரசு மதத் தொடர்பான செயல்பாடுகளை முன்கரம் நீட்டி எப்போதும் ஊக்குவித்துக் கொண்டே வருகிறது.

இது ஏதோ மத சம்பந்தப்பட்டவைதானே என்று கருதுவது பேதமையாகும்!

இதனால்தான் பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டுச் சூழல் குறித்து பன்னாட்டு நாணய நிதியத்தில் (IMF) துணை நிர்வாக இயக்குநர் சுதாகோபிநாத் இந்தியாவின் முதலீட்டுத் தகுதியை கேள்விக்குறியாக்குவதாகக் கணித்துள்ளார்! ஆனால், ஒன்றிய அரசு இதுபற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

எதிலும் ஒரு விஞ்ஞானப் பார்வையில்லை  – மாறாக மதரீதியான பார்வைக்கு மறுபெயர்தான் மோடி அரசு!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *