தமிழ்நாட்டில் முரண்பட்டவர்களின் சந்தர்ப்பவாதக் கூட்டணியாக என்.டி.ஏ. கூட்டணி உள்ளது கு.செல்வப்பெருந்தகை சாடல்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.25 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் சாம, பேத, தான தண்டங்களை பயன்படுத்தி எப்படியாவது பா.ஜ.வை காலூன்ற வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அ.தி.மு.க.வை நிர்ப்பந்தப்படுத்தி அமைக்கப்பட்ட கூட்டணி கட்சியினரின் முதல் அரங்கேற்றம் மதுராந்தகத்தில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டணிக்கு பெயர் அ.தி.மு.க. கூட்டணியா? தேசிய ஜனநாயக கூட்டணியா? என்கிற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.

முரண்பட்டவர்களின் சந்தர்ப்பவாதக் கூட்டணியாக இது அமைந்திருக்கிறது. இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை விமர்சிப்பதில் தமது உரையின் பெரும் பங்கை செலவழித்திருக்கிறார். இந்தியாவிலேயே பா.ஜ.வை கடுமையாக எதிர்க்கிற ஒரு மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தமிழ்நாட்டில் பா.ஜ.வை எதிர்ப்பதற்கு காரணம் ஒன்றிய அரசின் பாரபட்ச போக்கு தான். எனவே தமிழ் நாட்டில் மோடியும் அமித்ஷாவும் எத்தனைமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் தேர்தலில் உரிய பாடத்தை தமிழ்நாடு மக்கள் நிச்சயம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 

மோடி நினைப்பதும், எடப்பாடி சொல்வதும் ஒருபோதும் நடக்காது : வைகோ

தமிழ்நாடு

திருச்சி, ஜன.25 வரும் தேர்தலில் மோடி நினைப்பதும் நடக்காது, எடப்பாடி சொல்வதும் நடக்காது என வைகோ கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று (24.1.2026) அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அதிமுக கூட்டணியால் தேர்தல் ரேஸில் திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க இயலாது. அதிமுக-பாஜ கூட்டணியில் பெரும் முரண்பாடுகள் உள்ளன. எடப்பாடி பழனிசாமி தனிப்பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்கிறார்.

மோடியோ என்டிஏ கூட்டணி ஆட்சி என்கிறார். இது ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக உள்ளன. இரண்டும் நடைமுறையில் சாத்தியமில்லை. மோடி நினைப்பதும் நடக்காது, எடப்பாடி சொல்வதும் நடக்காது. அதிமுக தோல்வி உறுதியாகிவிட்டது. திமுக கூட்டணி வலுவாக உள்ளது. எனவே தற்போதுள்ள கூட்டணி அமைப்பே வெற்றிக்கு போதுமானது. இவ்வாறு கூறினார்.

 

தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண  குழுவில் உறுப்பினராக பெற்றோரும் சேர்ப்பு

சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றம்

சென்னை, ஜன.25 தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல் குறித்த திருத்தச் சட்ட முன்வடிவை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி (24.1.2026) அறிமுகம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

குழுவில் புதிய உறுப்பினர்கள்: தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவில் பெற்றோருக்குப் பிரதிநிதித்துவம் வழங்குவதற்காக, பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து ஒரு பெற்றோரை உறுப்பினராகச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் பள்ளிகள் இயக்குநரையும், அரசுத் துணைச் செயலர் நிலையில் ஒரு அலுவலரையும் உறுப்பினர்களாகச் சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளது.

முக்கிய மாற்றங்கள்

மேல்முறையீடு: கட்டண நிர்ணயத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் 15 நாட்களிலிருந்து 30 நாட்களாக உயர்த்தப்படுகிறது.

மறு ஆய்வு: இந்தக் குழுவால் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட பின்னர், பள்ளிகள் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, உரிய காலக்கெடு முடிவதற்குள் மறு ஆய்வுக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விவாதமும் பதிலுரையும்: இந்த மசோதாவின் மீது தி.வேல்முருகன் (தவாக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), ஷா நவாஸ் (விசிக), ஜி.கே.மணி (பாமக) ஆகியோர் விவாதத்தில் கலந்துகொண்டு வரவேற்றுப் பேசினர்.

உறுப்பினர்களின் கருத்துகளுக்குப் பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஸ்: “சிபிஎஸ்இ (CBSE) மற்றும் அய்சிஎஸ்இ (ICSE) பள்ளிகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவை சார்ந்து பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றன.

தனியார் பள்ளிகள் சார்ந்து பெற்றோர் புகார் கூறினால், நாங்கள் நடவடிக்கை எடுக்கத் தயார் நிலையில் உள்ளோம். உறுப்பினர்களின் கருத்துகளை ஆய்வு செய்து, புதிய விதிகள் மூலம் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

இதனைத் தொடர்ந்து சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *