சென்னை, ஜன. 25: சென்னை உள்பட பல மாவட்டங்களில்குளிர் நீடித்து வருவதால் முதியோர், இணை நோயாளிகளுக்கு முக வாத பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
பாதிப்பைத் தவிர்க்க நேரடியாக குளிர்ந்த காற்று முகத்தில் படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத் தியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நிகழாண்டு பருவ மழைக் காலத்தில் தட்பவெப்ப நிலை மாற்றமடைந்து குளிர் நிலவியது. சென்னையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் குளிர்ச்சி யான சூழல் உருவானது. இந்த கால நிலையில், ஃபேஸ் பெராலி சிஸ் எனப்படும் முக வாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
பாதிப்பு ஏற்பட்டால், பூரண குணமடைய இரண்டு முதல் நான்கு மாதங்களாகும். எனவே அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும்.
