விபத்து பகுதிகளைக் கண்டறிந்து தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் சாலை சந்திப்புகளில் ரவுண்டானா அமைச்சர் எ.வ.வேலு தகவல்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 25– தமிழ் நாட்டில் விபத்து பகுதிகளை கண்டறிந்து சாலை சந்திப்புகளில் அய்.ஆர்.சி. விதிகளுக்குட்பட்டு ரவுண்டானா அமைக்கப்படுகிறது என சட்டமன்றத்தில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் 23.1.2026 அன்று கேள்வி நேரத்தின்போது, பட்டுக்கோட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அண்ணாதுரை, பட்டுக்கோட்டை தொகுதி, மதுக்கூர் வடக்கு ஊராட்சி பெரமையார் கோயில் அருகில் உள்ள 4 வழிச்சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பொதுப்பணித்துறை அமைச் சர் எ.வ.வேலு அளித்த பதில் வருமாறு:-

இந்த சாலை சந்திப்பு, திப்பு கும்பகோணம், மன்னார்குடி, அதிராம்பட்டினம் சாலை பாப்பாநாடு, மதுக்கூர் சாலை சந்திக்கும் இடம் ஆகும். அய்.ஆர்.சி. விதிகளுக்குட்பட்டு 30 மீட்டர் விட்டத்துக்கு ரவுண்டானா அமைக்க வேண்டும். ஆனால் 23 மீட் டர்விட்டத்துக்குதான் இடம் இருக்கிறது. எனவே விரிவான திட்ட அறிக்கை தயாரித்து சோதனை ஓட்டம் பார்த்து ஆய்வுக்கு பின்னர் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுவாக விபத்துகளை குறைப்பதற்காகத்தான் சந்திப்பு சாலை மேம்பாட்டுக்கு இந்த அரசு முன்னுரிமை அளிக்கிறது. கடந்த நிதியாண் டில் ரவுண்டானாவுடன் கூடிய சாலை சந்திப்புகளை ரூ.100 கோடி செலவில் மேம்படுத்தியுள்ளோம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் விபத்து பகுதிகளை கண்டறிந்து சாலை சந்திப்புகளில் அய்.ஆர்.சி. விதிகளுக்குட்பட்டு ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், அடுத்த நிதியாண் டில் (2026-2027) முதலமைச்சருடன் கலந்து பேசி, எந்தெந்த சட்டமன்ற தொகுதிகளில் ஆய்வு மாளிகை, விருந்தினர் மாளிகை இல்லையோ அங்கெல்லாம் கட்டுவதற்கு முன்மொழிவு ஏற்பாடு செய்து கொண்டுவர முயற்சிகள் செய்வோம்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

உயர்மட்ட பாலத்துக்கு முன்னுரிமை

அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மதுரையில் அண்டர் பாஸ் திட்டத்தை நடை முறைப்படுத்தினால், தென் மாவட்ட போக்குவரத்துக்கு பயனுள்ளதாக இருக்கும்? அதனை செயல்படுத்தி தரவேண்டும் என துணைக்கேள்வி எழுப்பி னார். அதற்கு அமைச்சர் எ.வ.வேலு, ‘அண்டர் பாஸ் திட்டத்துக்கு அறிக்கை தயா ரித்து பணிகளில் நெடுஞ்சாலைத் துறை இறங்கியது. ஒன்றிய அரசாங்கம் அதனை மறுத்துவிட்டது. இப்போது மாற்றுப் பாதை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன’ என்றார்.

மேலும், ராமேசுவரம்-மதுரை தெப்பக்குளம் இணைக்கும் சாலை, விமான நிலையத்துக்கு செல்லும் சாலை, பாண்டிக்கோயிலுக்கு செல்லும் சாலை அனைவரும் கடந்து செல் லும் பாதையில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா? என்று சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா துணைக்கேள்வி எழுப்பினார். அதற்கு, ‘அது முக்கியமானது தான். இந்த ஆண்டு நிதிநிலைக்குள் எடுக்கவும் ஆய்வு மேற்கொண்டோம். தற்போது அதற்கான கோப்புகள் தயாரிக்கப்படுகின்றன. அடுத்த ஆண்டு இந்த பாலத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும்’ என அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *