கடலூர், ஜன. 25– நேற்று (24.1.2026) காலை 11 மணி முதல் 1:30 மணி வரை கடலூர் தலைமை அஞ்சலகம் அருகில் ஆற்காடு புத்தகம் திருச்சபை மற்றும் திருச்சபைகள் சார்பில் பேராயர் பீட்டர் பால் தாமஸ் தலைமையில் வட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது கிறிஸ்துமஸ் அன்று நடத்தப்பட்ட தாக்குதல் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட அனைத்து கட்சி மாவட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் முழக்க மிட்டு உரையாற்றினார்கள்.
திமுக தேர்தல் பணி குழுச் செயலாளர் இள.புகழேந்தி தொடக்க உரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சிறப்புரை ஆற்றினார். மற்றும் திமுக நகர செயலாளர் கே. எஸ்.ராஜா, விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் பரசு முருகையன், வழக்குரைஞர் திருமார்பன் துணை மேயர் தாமரைச்செல்வன் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில செயலாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் ரங்கமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், மக்கள் அதிகாரம் பாலு திமுக இளைஞரணி செயலாளர் அகஸ்டின் எழில் ஏந்தி (மாவட்ட கழகச் செயலாளர்) கடலூர் மாநகர கழகத் தலைவர் தென். சிவக்குமார், முஸ்லிம் லீக் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்கள்.
