செய்திச் சுருக்கம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அதானி வசமான
IANS செய்தி நிறுவனம்

அதானி குழுமத்தின் ஆதிக்கம் நியூஸ் மீடியாவிலும் அதிகரித்துள்ளது. 2023இல் பிரபல செய்தி நிறுவனமான IANS-ன் 50.50% பங்குகளை வாங்கிய அதானியின் மீடியா நிறுவனமான AMG மீடியா, 2024இல் 76% பங்குகளை கைப்பற்றியது. தற்போது IANS நிறுவனத்தின் 100% பங்குகளுமே AMG மீடியா வசம் சென்றுவிட்டது. ஏற்கெனவே NDTV, Quint போன்ற செய்தி நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளும் அதானி குரூப்பிடமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு வேண்டாம்…
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதை கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஏற்கெனவே இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தமிர்நாடு அரசு எதிர்த்து வரும் நிலையில், BPT, BOT படிப்புகளுக்கும் நீட் கட்டாயமக்கப்பட்டதை ஏற்க முடியாது எனவும் கூறியுள்ளார். இது ஏழைக் குடும்பங்களை நீட் பயிற்சிக்கு செலவழிக்க கட்டாயப்படுத்தும் செயல் என்றும் தெரிவித்துள்ளார்.

பகுதிநேர ஆசிரியர்களின்
போராட்டம் ஒத்திவைப்பு

பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 17 நாள்களாக பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே  சிறப்பு மதிப்பெண்கள் <<>> மூலம் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதனையடுத்து பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர், போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அவர்கள் அறிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *