அரசியல் ஸ்கேன் சென்டரிலிருந்து… ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பனிப்போர்! புதிய தலைமையால் கோபத்தில் ஆர்.எஸ்.எஸ்.!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

”நுண் பார்வையாளன்”

திடீரென தேசிய தலைவரான நிதின் நபின்;

புழுக்கத்தில் பா.ஜ., மூத்த தலைவர்கள்

பா.ஜ., தேசியத் தலைவராக நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டதால், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

பா.ஜ., முன்னாள் தலைவர் நட்டாவின் பதவிக்காலம், கடந்த 2024ஆம் ஆண்டிலேயே நிறைவடைந்தது. லோக்சபா தேர்தல் காரணமாக, பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த டிசம்பர் பதினான்கு ல், பீஹாரைச் சேர்ந்த நிதின் நபின், செயல் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, கடந்த 20ஆம் தேதி, பா.ஜ., தேசியத் தலைவராக நிதின் நபின் தேர்ந்தெடுக் கப்பட்டார். செயல் தலைவராக அறிவிக்கப்படும் வரை, நிதின் நபினை பீஹாருக்கு வெளியே பா.ஜ., வினருக்கு கூட தெரியாது

காங்கிரஸ், தி. மு. க, உள்ளிட்ட கட்சிகள், ஒரே குடும்பத்தில் இருந்தே, தலைவரை தேர்ந்தெடுக்கும் நிலையில், சாதாரண தொண்டரை, தேசியத் தலைவராக பா.ஜ., தேர்ந்தெடுத்துள்ளது

பிரதமர் மோடியே, ‘கட்சியில் இனி என் பாஸ்’ நிதின் நபின்’ என்கிறார். ‘ வேறு கட்சியில் இது சாத்தியமா’ என, சமூக ஊடகங்களில் பா. ஜ., வினர் வாதிட்டு வருகின்றனர். ஆனால், மறுபக்கம், நிதின் நபின் தேர்வு, பா.ஜ., வுக்குள்ளேயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

அவரை தேர்வு செய்தது பிரதமர் மோடி என்பதால், வெளிக்காட்டிக் கொள்ளாமல், மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருப்பதாக பா.ஜ., வினர் கூறுகின்றனர்

இது தொடர்பாக, பா.ஜ., தலைவர் ஒருவர் கூறியதாவது : பா.ஜ., வில் ஜாதி, மொழி, வயது வித்தி யாசம் இன்றி, யார் வேண்டுமானாலும் முதல்வர், தேசியத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட எந்த பதவிக்கும் வரலாம்.

தேசியத் தலைவர் பதவிக்கு பொருத்தமானவராக, ஒருவர் அடையாளம் காணப்பட்டால், தேசிய பொதுச்செயலர் போன்ற தேசிய பொறுப்பில் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது, அவரை பணியாற்ற வைத்தபின், தலைவராக அறிவிக்கலாம். அப்போது தான், அவருக்கும் அனுபவம் கிடைக்கும்

இந்த நடைமுறை தான், பா.ஜ., வில் இருந்து வந்தது. தேசிய பொதுச்செயலராகி, உ. பி., தேர்தலில் வெற்றியை தந்த பின் தான், அமித் ஷா தலைவரானார்.

நட்டா நீண்ட காலம் தேசிய பொறுப்பில் இருந்தவர். தலைவராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி கூட, நீண்ட காலம் தேசிய துணைத் தலைவராக இருந்தவர்

கடந்த 2009 லோக்சபா தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்ததும், கட்சியை சீரமைக்க, புதியவர் ஒருவரை தேசியத் தலைவராக்க முடிவு செய்து, மஹாராஷ்டிர மாநில பா.ஜ., தலைவராக இருந்த நிதின் கட்கரி, தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, கட்சிக்குள் நீண்ட விவாதம் நடத்தப்பட்டு, அவரது பெயர் இறுதி செய்யப்பட்டது

இப்போது, பீஹார் அமைச்சராக இருந்த நிதின் நபின், திடீரென தலைவராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு தேசிய அரசியலில் அனுபவம் இல்லை. கட்சிக்காக உழைத்த திறனுள்ள பல தலைவர்கள் இருக்கின்றனர்; அவர்களில் ஒருவரை தலைவர் பதவிக்கு பரிசீலித்திருக்கலாம்.

நிதின் நபின் தான் வேண்டும் என்றால், 2024 லோக்சபா தேர்தல் முடிந்த உடனேயே, அவரை தேசிய பொதுச் செயலராக நியமித்திருக்கலாம்.

இப்படி ஒருசிலர் மட்டும் முடிவு செய்து, தேசியத் தலைவரை அறிவிப்பதால், கட்சிக்காக உழைப்பவர்கள், என்ன உழைத்தாலும் பலனில்லை என நம்பிக்கை இழக்கின்றனர்.

இதை வெளியே சொல்ல முடியாமல், உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்; இது, கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

மேற்காணும் செய்திக் கட்டுரையை இனமலரான ‘தினமலர்‘ நாளேடு நேற்று (24.1.2026 – சென்னை பதிப்பு, பக்.21) வெளியிட்டுள்ளது.

இதனை ஆழ்ந்து படித்தால் இதுவரை ஊடகங்களில் பெரிதும் மறைத்து வைக்கப்பட்டவரும் ஒரு நிகழ்வு பற்றிய செய்தி இதன் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பதவியேற்றதற்கு (2014) ஆர்.எஸ்.எஸ். முக்கியக் காரணம் என்றாலும், அவர் தன்னையே முன்னுக்கு வைத்து (Self projection), பெரிதும் சுயவிளம்பரம் செய்து, இரண்டாம் முறை என்று அவர் தேர்வு செய்யப்பட்டு பிரதமரான நிலையில், ஆர்.எஸ்.எஸ். தயவின்றியே எங்களால் (பிஜேபி என்ற அதன் அரசியல் பிரிவால்) – சொந்தக் காலில் நிற்குமளவுக்கு பலமாக வேரூன்றி விட்டது என்று பகிரங்கமாக முந்தையத் தலைவர் பியுஷ் கோயல் உள்பட வெளிப்படையாகப் பேசியதன் விளைவு.

பி.ஜே.பி.அமைச்சரவையில் உள்ளவரும், நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு நெருக்கமாக உள்ளவருமான நிதின் கட்கரி போன்றோர் ‘தாமரைத் இலைத் தண்ணீராக’, அமைச்சரவையில் இருந்து கொண்டே பிரதமரிடம் நெருக்கம் காட்டாதவராக, தனியே செயல்படும் போக்கினைக் காட்டியதும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே நடக்கும் பனிப்போர் (cold war) என்பதன் பனிப்பாறையின் முனையாக வெளிவந்தது!

75 வயதுக்கு மேல் பெரிய பதவி – பொறுப்பில் நீடிக்கக் கூடாது என்ற பி.ஜே.பி. கட்சியின் நெடுங்கால முடிவினை, அந்த வயதை நெருங்கிய மோடி அவர்களுக்கு அதை எப்படி ஓரங்கட்டி, தானே பிரதமர் பதவியில்நீடித்து “விஸ்வகுரு”வாகி, உலகம் சுற்றி விருதுகளை வாங்கி – விளம்பர வெளிச்சத்தில் எப்போதும் நின்று ஜொலிப்பது எப்படி என்றே, தனது வசமாக்கிவிட்ட சக்தி வாய்ந்த “மீடியா வரை” ஊடக வெளிச்சத்தில் ‘24 மணி நேரமும்’ இருக்க விரும்புகிறார்.

பா.ஜ.க. தலைவராக – பியுஷ் கோயல் பதவிக் காலம் முடிவுறும் நிலையில், தக்கவரை ஆர்.எஸ்.எஸ். அடையாளம் காட்ட தற்போதுள்ள பீகாரைச் சேர்ந்த நடுத்தர வயதுக்காரர் – நிதின் நபின் என்பவரை – முதலில் செயல் தலைவராக (working president) அறிவித்து, இந்தியா முழுமைக்கும் எவரும் அறியாத அவரையே திடீரென மோடி தலைவராக்கிவிட்டது, ஆர்.எஸ்.எஸ். Vs மோடி பனிப்போரை மேலும் தீவிரமாக்கிக் கொண்டிருக்கிறது!

புதிதாக பா.ஜ.க. தலைவரான பீகாரைச் சேர்ந்த நிதின் நபின் மீதான ஆர்.எஸ்.எஸ். – மற்றும் மூத்த பா.ஜ.க. தலைவர்களது ‘அதிருப்தி’ மேகங்கள் திடீரென வெடிக்குமா? என்ன விளைவுகளை ஏற்படுத்தும் அல்லது அமைதி வழியில் அதன் பலன் தங்கள் பலத்தைக் காட்டி, பிரதமர் மோடிக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே! மூன்றாவது முறை அவருடைய பா.ஜ.க. தலைமை வலுவிழக்கிறது என்பதை உணர்த்த வடபுல மாநிலங்களில் அதன் வாக்கு வங்கித் திரட்டும் இயந்திரமான ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய தேர்தல் நேர உழைப்பைச் சற்று நிறுத்தியதன் விளைவே பா.ஜ.க. என்ற கட்சிக்குச் செல்வாக்கு சரிந்து, போதிய அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல், பீகார் நிதிஷ், ஆந்திர சந்திரபாபு தயவோடு ஒரு மைனாரிட்டி அரசாகவே பதவி ஏற்றது!

2014இலிருந்து நாக்பூர் – ஆர்.எஸ்.எஸ். தலைமையை நோக்கிச் செல்லாத பிரதமர் மோடி பிறகு திடீரென ஆர்.எஸ்.எஸ். தலைமையிடத்திற்கு ‘யாத்திரை’ செய்தார்! அப்போது இராமர் கோயில் திறப்பதிலிருந்து ‘சர்வமும் நானே’ என்ற மோடியின் நிலைப்போக்குக் கண்டு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்திற்கு எரிச்சல் என்றாலும், இரண்டாம் தேர்தலில் ‘மோடிக்குக் கியாரண்டி’ என்றெல்லாம் ‘தனி மனிதப் புகழை’ மேலோங்கச் செய்ததோடு, தனது தந்திர வித்தைகளால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தனக்கு வேண்டியவரான ஒருவரை பொதுச் செயலாளராக்கி தனது செல்வாக்கினைக் காப்பாற்றவும் முயன்று கொண்டுள்ளார்.

பிரதமர் மோடியின் செல்வாக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். இப்போது பா.ஜ.க.விலேயே இறங்குமுகமாக வருவதால் இந்த நிலைமைகள் ஒரு முன்னோட்டமாக முகவுரை எழுதத் தொடங்குகிறதா என்று அரசியல் அரங்கில் அடுத்த மில்லியன் டாலர் கேள்வியாகி பெரும் ‘விஸ்வரூபம்’ எடுக்கிறது.

பிரதமர் மோடி – அமித்ஷா இந்த இரண்டு பேர் ‘ராஜ்யம் தானா?’ என்று குமுறல் நாளுக்கு நாள் வடநாட்டு மாநிலங்களில் நிறைய மெல்லிய குரலில் கேட்பதாக, வடக்கே உள்ள ஆய்வாளர்கள் கூற்று!

ஆர்.எஸ்.எஸ். தயவின்றியே, அதனைப் புறந்தள்ளியே, தனது சொந்தத் திறமையான தந்திர வித்தைகளிலேயே தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முயலவேண்டும் என்பதற்கான அடுத்த மோடியின் வியூகத்தின் ஒரு தொடக்கமே, புதிய பா.ஜ.க. தலைவராக நிதின் நபின் திடீர் அறிவிப்பும் – ஒரு மனதானத் தேர்வும்.

என்றாலும் இந்த வெள்ளரிப் பழத்தை எப்படிப் பூண் போட்டு ஒன்றாக்குகின்றனர் என்பது போகப் போகத்தான் புரியும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *