வல்லம், ஜன. 24- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மண்டல அளவில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கபடி மற்றும் கால்பந்து விளையாட்டுப் போட்டிகளில் (Games) மூன்றாம் இடம் பிடித்து இப்பாலிடெக்னிக்கு பெருமை சேர்த்தனர்.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் உடல்நலம் மற்றும் ஆளுமை மேம் படுத்தும் பொருட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் சிறப்பாக பங்குபெற பயிற்சிகள் அளிக் கப்படுகிறது.
பாலிடெக்னிக் கல்லூரி களுக்கு இடையேயான கால்பந்தாட்ட போட்டி யானது இன்டர் பாலி டெக்னிக் அத்லெடிக் அசோசி யேசன் (IPAA) பாலிடெக்னிக் மாணவர்களிடையே கால்பந்து மற்றும் விளை யாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் உன்னத நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் கால்பந்து மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகின்றது.
தஞ்சை மண்டல பாலி டெக்னிக் கல்லூரிகளுக்கே இடையேயான இன்டர் பாலிடெக்னிக் அத்லெடிக் அசோசியேசன் (IPAA) நடத்தும் மாணவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டி யானது தஞ்சையிலுள்ள திருமலைச்சமுத்திரம் சண்முகா பாலிடெக்னிக் கல்லூரியில் 07.01.2025 அன்று நடைபெற்றது. இதில் தஞ்சாவூரில் மண்டல அளவிலான 12 பாலிடெக்னிக் அணிகள் பங்கு பெற்றது. இதில் வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்தது.
எ.சிவசரவணன்-II/Civil, எஸ்.பிரனீஸ்- III/EEE, எஸ்.மணிகண்டன்-III/Mech, எஸ்.அன்புச்செல்வன்-II/ECE, ஆர்.தேவராஜன்-II/Mech, பி.காமேஷ்-I/CT, எம்.முகமது ராசூல்-I ECE, இ.ஆதித்யா-III/EEE, எல்.சைமன் கிறிஸ்டோபர்-III/Mech, ஏ.பாரதி-II/Civil, எஸ்.சிபிராஜ்-II/Mech, ஏ.விக்னேஷ்-I/EEE, கே.ராகுல்-II/Mech, எஸ்.கவின்குமார்-I/Mech, ஜெ.அப்துல் ராசிக்-III/Arch, என்.காரீஷ் பாண்டியன்-II/EEE, ஏ.ஜெய் ரித்தீஷ்-I/CT ஆகிய மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர்.
தஞ்சை மண்டல பாலி டெக்னிக் கல்லூரிகளுக்கே இடையேயான இன்டர் பாலிடெக் னிக் அத்லெடிக் அசோசி யேசன் (IPAA) நடத்தும் மாணவர்களுக்கான கபாடி போட்டியானது கும்பகோணத்தில் உள்ள அன்னை பாலிடெக்னிக் கல்லூரியில் 08.01.2025 அன்று நடைபெற்றது. இதில் தஞ்சாவூரில் மண்டல அளவிலான 11 பாலிடெக்னிக் அணிகள் பங்கு பெற்றது. இதில் வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்தது.
பி.சஞ்சய்-I/Mech, பி.விஷ்வா-II/Mech, எம்.அரவிந்த்-II/ECE, ஜி.தரனிதரன்-I/EEE, இ.ஈஸ்வரன்-II/Mech, ஆர்.ரிஷ்வர்-III/Mech, எம்.விக்னேஷ்வரன்-II/Civil, என்.திருமுருகன்-III/Mech, சி.பெருமைக்குமார்-III/Civil, எம்.பூபதி-III/Civil, ஆர்.அறிவரசு-III/Mech, பி.முத்துகுமார்-III/Civil ஆகிய மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர்.
மேலும் இக்கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் டாக்டர் ஆர்.ஜி.கிரிதரபிரசாத் கலந்து கொண்டு மாணவர்களை ஒருங்கிணைத்தார். பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி, துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா, முதன்மையர் ஜி.இராஜாராமன் மற்றும் பேராசிரியர்கள் விளை யாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டு களையும் தெரிவித்தார்கள்.
