இந்தூர், ஜன.24 ‘இந்தியாவின் தூய்மையான நகரம்!’ எனப் பெயர் பெற்ற இந்தூரில், மீண்டும் அசுத்தமான குடிநீரைக் குடித்த தால் ஒரே பகுதியில் 22 பேர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட் டுள்ளனர்.
இந்தூரின் மவுள பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 22 பேருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
இவர்களில் நிலைமை மோசமாக இருந்த 9 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் சிவம் வர்மா மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நிலைமையைக் கேட்டறிந்தார்.
குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்திருக்கலாம் எனச் சந்தேகிக் கப்படுகிறது. மாநக ராட்சி அதிகாரிகள் குடிநீர் மாதிரி களைச் சேகரித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். ஏற்ெகனவே சில வாரங்கள் முன் இந்தூரின் பாகீரத்புரா பகுதியில் இதேபோல அசுத்தமான குடிநீரால் 23 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
