லக்னோ, ஜன.24 லக்னோவில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்ற கிளையின் வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து, வழக்குரைஞர் மற்றும் பயிற்சி வழக்குரைஞரைக் கைது செய்ய முயன்ற மூன்று காவலர்களை, நீதிமன்ற பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரே கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் அலகா பாத்தில் உள்ள ககோரி காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் உள்ளிட்ட மூன்றுபேர் லக்னோ உயர் நீதிமன்ற வளாகத் திற்குள் நுழைந்தனர். பசு வதை தொடர்பான வழக்கில் தொடர் புடைய வழக்குரைஞர் குர்பான் சித்திக் மற்றும் அவரது ஜூனியர் வழக்குரைஞர் ஆகியோரைக் கைது செய்ய அவர்கள் முயன்றனர்.
உயர் நீதிமன்றத்தில் நுழைவ தற்கு அனுமதியை அவர்கள் பெறவில்லை. இதனை கவனித்த நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள காவலர்கள், அனுமதியின்றி அத்துமீறி நுழைந்ததற்காக அந்த மூன்று காவலர்களையும் தடுத்து நிறுத்தி அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட காவ லர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் பின்வரும் பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது:
பிரிவு 329 (3): அத்துமீறி நுழை தல் தொடர்பான குற்றச் சாட்டுகள்.
பிரிவு 351 (3): குற்றவியல் மிரட்டல் தொடர்பான நடவடிக்கைகள்.
பிரிவு 352: அமைதிக்கு ஊறு விளைவிக்கும் நோக்கில் அவமதிப்பு செய்தல் போன்ற பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்து கைது செய்தனர் பின்னர் அவர்கள் நீதிபதி முன்னி றுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததும் அல்லா மல் வழக்குரைஞர்களை கைது செய்ய முயன்ற நிகழ்வு அம்மாநில, வழக்குரைஞர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலிக் குற்றச்சாட்டு!
வழக்குரைஞர் குர்பார் சித்திக் சிறுபான்மையினரின் வீடுகள் இடிப்பு தொடர்பாக பல முறை உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியுள்ளார். இதனால் அவர் மீது மாட்டிறைச்சி கடத்தலில் தொடர்புடையாக இந்து அமைப் பினர் வாய்மொழியாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய முயன் றுள்ளனர் இது தொடர்பாக ஏற்ெகனவே குர்பான் சித்திக் விளக்கம் அளித்த நிலையில் அவரை எப்படியாவது கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற மேலிட அழுத்தம் காரணமாக உ.பி. காவல்துறை இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
