புதுடில்லி, ஏப்.22 இந்தியாவில் நேற்று (21.4.2023) 11,692 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று (22.4.2023) 12,193 ஆக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 4,48,69,684-லிருந்து 4,48,81,877 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 66,170 லிருந்து 67,556 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் மேலும் 42 பேர் உயிரி ழந்துள்ளனர். இதன் மூலம் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,258-லிருந்து 5,31,300 ஆக உயர்ந்துள்ளது.