சென்னை, ஜன.22 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அதிகாரப் பூர்வமாக விலகியுள்ள நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது.
வானிலை மாற்றம்
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால், தமிழ்நாட்டில் வறண்ட வானிலை மாறி மீண்டும் மழைக்கான சூழல் உருவாகியுள்ளது.
ஜனவரி 24-ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும், குறிப்பாக கடலோரப் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இருப்பினும், ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
பருவமழை (19.1.2026) விலகியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் அதிகமாகக் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் மேகமூட்டமும், இதர பகுதிகளில் வறண்ட கால நிலையும் தொடரும். கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் குறைந்து வந்த நிலையில், தற்போது ஏற்பட் டுள்ள இந்த வளிமண்டல சுழற்சி விவசாயிகளுக்கு ஓரள விற்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
