காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர்சிங் பேட்டி
புதுடில்லி ஏப்.22 காங்கிரஸ் மூத்த தலைவரும், அரியானா மாநில மேனாள் முதலமைச்சருமான பூபிந் தர்சிங் ஹூடா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறிய தாவது:- மோடி அரசு, விவசாயி களின் வருவாயை இரட்டிப்பு ஆக்குவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், விவசாய இடுபொருட் களின் செலவுதான் இரட்டிப்பு ஆகியுள்ளது. டீசல் விலையும் அதி கரித்துள்ளது. விவசாயிகளின் கடன் சுமையும் உயர்ந்துள்ளது. மோடி அரசு ஆட்சிக்கு வந்த 2014ஆ-ம் ஆண்டு, விவசாயிகளின் கடன் அளவு ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக இருந்தது. தற் போது, ரூ.23 லட்சத்து 44 ஆயிரம் கோடியாக உயர்ந்து விட்டது. காங்கிரஸ் ஆட்சியின்போது, ரூ.72 ஆயிரம் கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், மோடி அரசு, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வில்லை. கார்ப்பரேட்களின் கடன் களை மட்டும் தள்ளுபடி செய்தது. மறு பக்கம், விவசாயிகள், ஆழமான கடன்சுமையில் சிக்கிக்கொண்டனர். இதற்கு மோடி அரசின் கொள் கைகளே காரணம்.
சட்டப்பூர்வ உத்தரவாதம்
விவசாய விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பது பற்றி ஆய்வு செய்ய ஒன்றிய அரசு ஒரு குழு அமைத்துள்ளது. ஆனால், அக்குழுவின் விசாரணை வரம்புகள் நீர்த்துப் போய்விட்டன. அதனால், அந்த குழு, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்காது. விவசாயிகளின் எதிர் பார்ப்பை அக்குழுவால் பூர்த்தி செய்ய இயலாது. விவசாய சங்கங் களும் இதே கருத்தைக் கொண்டுள் ளன. இப்பிரச்சினையில் அரசின் நோக்கம் சந்தேகமாக உள்ளது. அரசுக்கு அக்கறை இருந்தால், முத லிலேயே சட்டபூர்வ உத்தரவாதம் அளித்திருக்கும்.
ரூ.40 ஆயிரம் கோடி லாபம்
ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட் சிக்கு வந்தால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத் தரவாதம் அளிக்கவும், அந்த விலைக்கு குறைவாக விற்பதை தண்டனைக்குரிய குற்றமாக அறி விக்கவும் சட்டம் கொண்டுவரும். பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம், கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் கருவியாக மாறிவிட்டது. அத்திட்டத்தால், கார்ப் பரேட் நிறுவனங்கள் ரூ.40 ஆயிரம் கோடி லாபம் சம்பாதித்துள்ளன என்று அவர் கூறினார்.