புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு 2-ஆவது இடம் இதுவரை 74 பொருட்களுக்கு கிடைத்துள்ளது

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.21- புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களில் தமிழ் நாடு 2-ஆவது இடத்தில் உள்ளது. இதுவரை 74 பொருட்களுக்கு கிடைத்துள்ளது.

ஒரு பொருளின் தரம், அதன் உற்பத்தி முறை மற்றும் சிறப்பம்சங்கள் அந்த இடத்தின் மண், காலநிலை அல்லது அங்கு வாழும் மக்களின் பாரம்பரியத் திறமையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும்போது அதற்கு புவிசார் குறியீடு வழங்கப் படுகிறது. இது ஒரு பொருளின் பூர்வீகத்தை உலகிற்குப் பறை சாற்றும் முத்திரையாகச் செயல் படுகிறது. நுகர்வோர் ஒரு பொருளை வாங்கும் போது, அது உண்மையான இடத்திலிருந்து வந்த தரமான பொருள்தான் என்பதற்கு இது சான்றாக அமைகிறது.

இந்த புவிசார் குறியீடு விவசாயம், கைவினை, உணவு, இயற்கை மற்றும் கைத்தொழில் சார்ந்த பொருட்களுக்கு வழங்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் புவிசார் குறியீடு என்பது ஒரு மண்ணின் பாரம் பரியத்தையும், அந்த மக்களின் உழைப்பையும் அங்கீகரிக்கும் உலகளாவிய கவுரவம் ஆகும். இது போலித் தயாரிப்புகளிடம் இருந்து உண்மையான உள்ளூர் உற்பத்தியாளர்களை காக்கும் ஒரு கேடயமாகவும் திகழ்கிறது.

74 பொருட்களுக்கு…

அந்த வகையில் புவிசார் குறியீடு பெறுவதில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும், விளையும் 74 வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. சமீபத்தில் உறையூர் பருத்திச் சேலை, கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை, நாமக்கல் கல்சட்டி, தூயமல்லி அரிசி, அம்பாசமுத்திரம் சொப்புச் சாமான்கள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றன.

இதுவரை புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்ற 74 பொருட்களில் கைவினைப் பொருட்கள் பிரிவில் 38 பொருட்களுக்கும், உணவுப் பொருட்கள் பிரிவில் 9 பொருட் களுக்கும், உற்பத்திப் பொருட்கள் பிரிவில் 3 பொருட்களுக்கும், விவசாயப் பொருட்கள் பிரிவில் 24 பொருட்களுக்கும் கிடைத்திருப் பதாக தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை புள்ளி விவரங்களாக தெரிவித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் வரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருந்த நிலையில், கடந்த 21 மாதங்களில் 16 பொருட்களுக்கு மேலும் புவிசார் குறியீடு பெற்றுள் ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு 2ஆவது இடம்

இந்த புவிசார் குறியீடு மாநிலத்தின் செழுமையான பாரம்பரியம், திறமையான கைவினைத்திறன் மற்றும் விவசாய சிறப்பை பிரதிபலிக்கிறது. அத்துடன் புகழ்பெற்ற கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் முதல் தனித்துவமான விவசாய விளைபொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் வரை, புவியியல் குறியீடுகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் தனித் துவமான அடையாளம் மற்றும் பாரம் பரியத்தை கொண்டாடுகின்றன.

இதன் மூலம் புவிசார் குறியீடு பெறுவதில் மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவு கிறது. இதில் தமிழ்நாடு 2-ஆவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் 77 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றிருக்கிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *