சென்னை,ஏப்.22- கவிஞர் தமிழ்ஒளி கடந்த 1924 செப்.21ஆம் தேதி பிறந்தார். அவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழா வரும் செப்.21ஆம் தேதி தொடங்குகிறது.
இதன் ஒரு பகுதியாக, கவிஞர் தமிழ்ஒளி நூற் றாண்டு விழா குழுவுடன் இணைந்து, சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறை சார்பில் ‘கவிஞர் தமிழ் ஒளி படைப்புலகம்’ எனும் கருத்துடன் வரும் செப்.20, 21ஆம் தேதி களில் பன்னாட்டு கருத் தரங்கம் நடைபெறு கிறது.
இதில் கட்டுரை வாசிக்க விருப்பம் உள்ள வர்கள் தங்களை பற்றிய முழு விவரத்தையும், தாங் கள் தேர்ந்தெடுக்கும் தலைப்பில் 100 சொற்க ளில் கட்டுரை சுருக் கத்தையும், கருத்தரங்க வலைதளத்தில் (<www.kavingarthamizholi100.com>) தரப்பட்டுள்ள கூகுள் ஷீட்டில் (Google Sheet) மே 31-க்குள் பதி வேற்றம் செய்ய வேண் டும். இதற்கு கட்டணம் இல்லை. தேர்ந்தெடுக் கப்படும் கட்டுரையா ளர்களின் பெயர் பட்டி யல் ஜூலை 15ஆம் தேதிக்குள் அறிவிக்கப் படும். செப்.20, 21ஆம் தேதிகளில் நடைபெறும் பன்னாட்டு கருத்தரங் கில் பங்கேற்று கட்டுரை வாசிக்க தேர்ந்தெடுக்கப் படும் அனைவருக் கும் உரிய அழைப்பு அனுப் பப் படும். தேர்ந்தெடுக் கப்பட்ட கட் டுரைகள், நூலாக தொகுத்துவெளி யிடப்படும். மேலும் விவ ரங்களுக்கு, கருத்தரங்க வழிநடத்துக் குழு செய லாளர் தா.ஜான்சன் வெஸ்லியை 9677251140 என்ற எண்ணிலும், tha mizholi100@gmail.com என்ற மின்னஞ்சல் முக வரியிலும் தொடர்பு கொள்ளலாம்.