திருமுட்டம், ஜன. 20– சிதம்பரம்(கழக)மாவட்டத்திற்குட்பட்ட திருமுட்டம் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் திரு முட்டம் மக்கள் மருந்த கத்தில் 19.1.26.மாலை 6 மணியளவில் மாவட்ட கழகத் தலைவர் பேரா. பூ. சி. இளங்கோவன் தலை மையிலும், மாவட்ட. கழகச் செயலாளர் மழவைகோவி. பெரியார்தாசன் முன்னி லையில் நடைப்பெற்றது.
மாவட்ட கழகத் துணை செயலாளர் ப. முருகன், மாவட்ட இணைத் தலைவர் சிற்பி சிலம்பரசன், மாவட்ட இணைச் செயலாளர் மா. பஞ்சநாதன், ஒன்றிய தி. க. நிர்வாகிகள் பெரியண்ணசாமி, கொழை ராசசேகரன், நகரதலைவர் சிவ.பாண்டியன், ப. க. வெற்றிவேல் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள். நிறைவாக மாவட்ட தலைவர் பேரா. பூ. சி. இளங்கோவன் மாநில செயற்குழுவின் தீர்மானங்களை செயல் படுத்துதல், கிராமங்களில் இயக்கப் பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல், கிளைகழகங்கள் தோரும் தோழர்களை சந்தித்தல், பெரியார்உலகம் நிதி, விடுதலை சந்தா திரட்டுதல் –செயல்பாடுகள் குறித்து விளக்கமாக பேசினார்.
