பொங்கல் பரிசு ரூ.3000 வாங்கவில்லையா? தமிழ்நாடு அரசு வெளிட்ட முக்கிய அறிவிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 20- தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு சார்பாக ரேசன் கடைகள் மூலம் ரூ. 3000 உட்பட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை பொங்கல் பரிசு பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கு பரிசாக ரொக்கமாக ரூ.3,000 வீதம் ரொக்கம் ரூ.6687.51 கோடி, ஒரு கிலோ அரிசியாக ஒரு கிலோ சர்க்கரையாக ஒரு முழு நீளக் கரும்பாக பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.248.66 கோடி மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.668.12 கோடி செலவில் வேட்டி சேலை மொத்தம் ரூ.7604.29 கோடி செலவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அந்த வகையில் கடந்த 8ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் ஜனவரி 14ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பானவது வழங்கப்பட்டது. அந்த வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பானது  2,22,91,710 அரிசி பெறும் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,

கடந்த 14ஆம் தேதி வரை 2.15 கோடி பயனாளர்களுக்கு அதாவது 97 சதவீதம் பேருக்கு  ரூ.6453.54 ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்னும் 7 லட்சம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காமல் உள்ளனர் அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில் தற்போது பொங்கல் பரிசுத் தொகுப்பை நியாயவிலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பொங்கல் பரிசு தொகுப்பு ரேசன் கடைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *